| அடகு நிறுவனம் திடீர் மூடல்: நகை கொடுத்தவர்கள் மறியல் Dinamalar
அடகு நிறுவனம் திடீர் மூடல்: நகை கொடுத்தவர்கள் மறியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2019
00:39

திருப்பூர்:திருப்பூர் கே.வி.ஆர்., நகரில் தங்க நகை அடகு வைக்கும் பைனான்ஸ் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. ஏராளமான பொதுமக்கள் நகைகளை அடகு வைத்து, பணம் பெற்றிருந்தனர். சில நாட்களாக அந்நிறுவனம் திறக்கப்படாமல் பூட்டப்பட்டு இருந்தது.நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது சகோதரருக்கு இடையே சொத்து பிரச்னை இருந்து வருகிறது. இதனால், நிறுவனத்துக்கு கூடுதல் பூட்டு ஒன்றை அவரது சகோதரர் பூட்டி சென்றது தெரிந்தது.அடகு வைத்த நகையை மீட்டு தர வலியுறுத்தி, சென்ட்ரல் போலீஸ் ஸ்டேஷனை பாதிக்கப்பட்டவர்கள் முற்றுகையிட்டனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தி, விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். சமாதானமாகி கலைந்து போனவர்கள் மீண்டும் வந்து, நகையை உடனே பெற்றுத்தர வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். தெற்கு தாசில்தார் மகேஸ்வரன், போலீசார் தகவல் தெரிவித்தனர். நிறுவன ஊழியரை அழைத்து, நிறுவனத்தை பொதுமக்களிடம் திறந்து காட்டினர். நகைகள் அங்கு பத்திரமாக இருப்பதாக தெரிவித்தனர். உடனடியாக பணம் கட்டி, பலர் நகைகளை திரும்ப பெற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X