பூ மார்க்கெட்டில் தடை விதித்தும் இன்னும் விற்பனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2019
01:59

இ.பி., காலனியிலேயே இப்படியா?மாநகராட்சி, 16வது வார்டுக்குட்பட்ட, வடவள்ளி, இ.பி., காலனியில், சிதிலமடைந்து உள்ள, மின் கம்பத்தை அகற்றி விட்டு, புதிய கம்பத்தை அமைக்க வேண்டும்.-ஹரிஹரன், வடவள்ளி.

பாதியில் நிற்குது பணிதடாகம் ரோடு, டி.எஸ்.நகர், அம்மன் நகரில், குடிநீர் குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்ததும், தார் சாலை அமைக்காமல், பணி பாதியில் நிற்கிறது.- ரகுநாத், டி.வி.எஸ்.,நகர்.

வடிகால் வசதி தேவைவேடபட்டி, காயத்ரி நகர் குடியிருப்பு பகுதியில் மழைநீர் வடிகால் இல்லாததால், காலி இடங்களில், மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளது. கொசு உற்பத்தியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.-ஜெயராமன், காயத்ரி நகர்.

குப்பை அள்ளுவதில்லைநல்லாம்பாளையம், சீனிவாசா நகரில், சாலையோரம் குவிக்கப்படும் குப்பை, நாள் கணக்கில் அள்ளப்படாமல் குவிந்துள்ளது.- வேலுசாமி, நல்லாம்பாளையம்.

சாலையை சீரமைக்கணும்மாநகராட்சி, 27வது வார்டுக்கு உட்பட்ட, சின்னவேடம்பட்டி, ஸ்டேட் பாங்க் காலனியில், குழாய் பதிக்கும் பணி நிறைடைந்துள்ள நிலையில், தோண்டப்பட்ட சாலை சீரமைக்கப்படவில்லை.- கோவிந்தராஜ், சின்னவேடம்பட்டி.

போலீஸ் பயிற்சி பள்ளி அருகே துர்நாற்றம்டாக்டர் பாலசுந்தரம் ரோடு, போலீஸ் பயிற்சி பள்ளி வடபுரம், செங்காடு பகுதியில், நிரம்பி வழியும் குப்பை தொட்டியில் இருந்து, குப்பை அள்ளப்படாததால், அருகிலேயே குப்பை குவிக்கப்படுகிறது.- சாரதா, காந்திபுரம்.

குளமாக மாறிய சாலைவடவள்ளி, மருதம் நகரில், சாலை வசதி மற்றும் வடிகால் வசதி இல்லாததால், சிறிய மழை பெய்தால் கூட, மழைநீரால், சாலையில் குளம் போல் தேங்கிவிடுகிறது.- பிரியா, மருதம் நகர்.

துர்நாற்றம் தாங்க முடியலரத்தினபுரி, பூவாத்தாள் லே-அவுட்டில் உள்ள, மசூதி மற்றும் விநாயகர் கோவில் அருகில் உள்ள சாலையில், மீன்கடை கழிவு கொட்டப்படுவதால், இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.- சாந்தி,

பூவாத்தாள் லே-அவுட்.

கொசு மருந்து அடிக்கணும்திருச்சி ரோடு, புனித பிரான்சிஸ் பள்ளி எதிரில் உள்ள, ஜி.ஆர்.ஜி., லே-அவுட்டில், வீடுகளுக்கு இடையே உள்ள காலி இடத்தில், மழைநீர் தேங்கி, கொசு உற்பத்தி கூடமாக மாறியுள்ளது.- ரவீந்திரன், ஜி.ஆர்.ஜி., லே-அவுட்.

பராமரிப்பில்லாத மின்கம்பம்தெலுங்குபாளையம், பாரதி ரோடு, சாஸ்தா நகர் எதிரில் உள்ள, மின் கம்பம் செடிகளால் சூழப்பட்டு, மின் ஒயர்களிலும் செடி படர்ந்துள்ளது. இவற்றை அகற்றி, கம்பத்தை பராமரிக்க வேண்டும்.- ஆறுமுகம், தெலுங்குபாளையம்.

விபத்து அபாயம்காளப்பட்டி, நேரு நகர், கிழக்கு, இந்திரா நகரில் உள்ள, மரங்களின் கிளைகள், மின் கம்பிகளில் உரசிக்கொண்டுள்ளன. மின் விபத்தை தவிர்க்க, கிளைகளை அகற்ற வேண்டும்.- செல்லதுரை, நேரு நகர்.

சாலையை சீரமைக்கணும்விளாங்குறிச்சி, சேரன் மாநகர் அருகில், குமுதம் நகர், விக்னேஷ் நகரில் சாலை குழிகளாக உள்ளது. இச்சாலையை சீரமைக்க வேண்டும்.-சீனிவாஸ் ரவிச்சந்திரன், விக்னேஷ் நகர்.

மருத்துவமனை முன் தேங்கும் தண்ணீர்மாநகராட்சி, 17வது வார்டுக்குட்பட்ட, கல்வீரம்பாளையத்தில், பள்ளி மற்றும் மருத்துவமனை அருகில், சாலை வசதி இல்லை. மண் சாலையில் மழை நீர் தேங்கி, சேறும் சகதியுமாகவும், நீர் தேங்கியும் உள்ளது.- லோகேஷ், கல்வீரம்பாளையம்.

மின் கம்பத்தை மாற்றணும்சின்னவேடம்பட்டி, சி.எம்.எஸ்., கல்லுாரி அருகில், சாலையோரம் உள்ள மின் கம்பம் சாய்ந்து வீடுகளின் மேல் விழும் நிலையில் உள்ளது.- ஆதவன், பாரதி நகர்.

தெருவிளக்குகள் தேவைமாநகராட்சி, 32வது வார்டுக்குட்பட்ட, விநாயகபுரம், காந்தி நகரில், பல ஆண்டுகளாக நான்கு தெருவிளக்குகள் மட்டுமே உள்ளது. கூடுதல் தெருவிளக்குகள் அமைத்துத் தரவேண்டும்.-முரளிதரன், காந்தி நகர்.

குப்பை குவியல்ஆர்.எஸ்.புரம், வெங்கடகிருஷ்ணா ரோட்டில், குப்பை தொட்டி இல்லாதால், சாலையோரம் குப்பை கொட்டப்படுகிறது; இக்குப்பை அள்ளப்படுவதில்லை.-சிவகுமார், ஆர்.எஸ்.புரம்.

ரோடு மோசம்திருச்சி ரோடு, சிங்காநல்லுாரியில் இருந்து, வெள்ளலுார் செல்லும் ரோடு குழிகளாக உள்ளது; வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.- அய்யாச்சாமி, வெள்ளலுார்.

கோவில் அருகில் சாலை படுமோசம்மாநகராட்சி, 44வது வார்டுக்குட்பட்ட நல்லாம்பாளையம், விஜயா நகரில், பொங்காளியம்மன் கோவில் அருகே, சாலை குழிகளாக உள்ளது; சீரமைக்க வேண்டும்.- பாலா, விஜயா நகர்.

பூ மார்க்கெட்டில் பிளாஸ்டிக்மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள, பூ மார்க்கெட்டில், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்பாடு தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதிகாரிகள் ஆய்வு செய்து அழிக்க வேண்டும்.- கோமதி ராஜ், கோவை.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X