விளாங்குறிச்சி - ேஹாப் காலேஜ் ரோட்டில், காலை நேரத்தில், மண், செங்கல் மற்றும் சரக்கு வாகனங்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன. காலை நேரத்தில், இந்த வாகனங்கள், சாலையில் சென்று வருவதால், பிற வாகனங்களை இயக்க முடியவதில்லை; போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பள்ளி, கல்லுாரி செல்வோர், பணிக்கு செல்வோர் மிகவும் அவதிப்படுகின்றனர். இச்சாலையில், காலை, 9:30 மணி வரை, சரக்கு வாகனங்களை இயக்க தடை விதிக்க வேண்டும்.-சம்பத்குமார், விளாங்குறிச்சி.
போர்க்கால நடவடிக்கை எடுக்கணும்மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், புதிய குடிநீர் திட்டத்துக்கான குழாய் பதிக்கும் பணி, பாதாள சாக்கடை திட்ட பணி, பெரும்பாலான இடங்களில் நிறைடைந்துள்ளது. ஆனாலும், இப்பணிக்காக தோண்டப்பட்ட ரோடுகள், சீரமைக்கப்படாமல் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் லேசான மழைக்கே, இச்சாலைகள் சேறும் சகதியுமாக மாறி, ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. வடகிழக்கு மழை துவங்கிவிட்ட நிலையில், வீதிகளில் உள்ள குழிகளை மூட, போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.-தினேஷ், கஸ்துாரி நகர்.