சென்னை : கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும், 'ஸ்கோடா ஆட்டோ இந்தியா' நிறுவனம், 'கோடியாக் ஸ்கவுட்' என்ற புதிய காரை அறிமுகம் செய்துள்ளது; இதன் விலை, 33.99 லட்சம் ரூபாய்.
இது குறித்து, ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் விற்பனை, சேவை மற்றும் சந்தைப்படுத்துதல் பிரிவின் இயக்குனர் ஜாக் ஹோலிஸ் கூறியதாவது:எங்கள் நிறுவனம், வாடிக்கையாளர்கள் வழங்கும் பணத்தின் மதிப்பிற்கு ஏற்ப, அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யக்கூடிய வகையில், கோடியாக் காரை அறிமுகம் செய்தது. இது, சொகுசு கார்களின் வசதியை அளிக்கும்.
புதிய கோடியாக் ஸ்கவுட் கார், இந்தியாவில், எங்கள் நிறுவனத்தின், சொகுசு கார் பிரசாரத்தின் ஒரு பகுதியாக திகழும். ஆர்வத்தை துாண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த காரில், நேர்த்தியான உட்புற வசதிகள், முன்னணி பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. ஏழு இருக்கைகள் உடைய, கோடியாக் ஸ்கவுட் கார், 'லாவா புளு, குவார்ட்ஸ் கிரே,மூன் வைட், மேஜிக் பிளாக்' என, நான்கு நிறங்களில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட, ஸ்கோடா டீலர்களிடமும் கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.