சென்னை : பண்டிகை காலத்தை முன்னிட்டு, விற்பனையை அதிகரிக்கும் வகையில், 'புளூ ஸ்டார்' நிறுவனம், விளம்பர துாதராக, இந்திய கிரிக்கெட் வீரர், விராட் கோலியை நியமித்துள்ளது.
நாட்டில், 'ஏசி' மற்றும் வணிக ரீதியிலான, குளிர்பதன பெட்டிகள் விற்பனையில், புளூ ஸ்டார் நிறுவனம், முன்னணியில் உள்ளது.அந்நிறுவனம், சந்தையை விரிவாக்கம் செய்ய, புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பண்டிகை சீசனை முன்னிட்டு, விற்பனையை அதிகரிக்கும் வகையில், அவற்றை, நாடு முழுவதும் விளம்பரப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக, அந்நிறுவனம், 'ஏசி' சாதனங்களின் விளம்பர துாதராக, கிரிக்கெட் வீரர் விராட் கோலியை நியமித்துள்ளது.
இது குறித்து, அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் கூறுகையில், ''ஏசி சாதனங்களுக்கு, தொடர்ந்து தேவை அதிகரித்து வருகிறது; அதை பூர்த்தி செய்ய, எங்கள் நிறுவனம், வாடிக்கையாளர் விரும்பும் வகையில், 'ஏசி' சாதனங்களை விற்பனை செய்யும்,'' என்றார்.