மழையை பொருட்படுத்தாமல் காசிமேடில் குவிந்த மீன்பிரியர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2019
03:53

காசிமேடு : புரட்டாசி மாதம் முடிந்த நிலையில், காசிமேடு மீன் சந்தையில், மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் கூட்டம் அலைமோதியது.



புரட்டாசி மாதம் காரணமாக, காசிமேடு மீன்சந்தை, எண்ணுார், திருவொற்றியூர் மீன் சந்தைகளில், மீன் விற்பனை மளமளவென சரிந்தது. விலையும் கணிசமாக குறைந்திருந்தது.இந்நிலையில், கடந்த, 17ம் தேதியுடன் புரட்டாசி மாதம் முடிந்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமையான நேற்று, விடுமுறை தினமானதால், காசிமேடு மீன்சந்தையில், வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை முதலே, மழையையும் பொருட்படுத்தாமல், மக்கள் கூட்டம் அலைமோதியது.



பருவ மழை காரண மாக, பல படகுகள் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு செல்லவில்லை. இதனால், பலருக்கு விரும்பிய மீன்கள் கிடைக்கவில்லை. இருப்பினும், வஞ்சரம், சங்கரா, நெத்திலி, நண்டு, கடமா, பாறை, கறுப்பு வவ்வால், இறா, மத்தி போன்ற மீன்களின் வரத்து அதிகமாக இருந்தது. விலையும் சற்று அதிகரித்திருந்தது. இந்த மாதத்தில், தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு, மக்கள் சென்னையை விட்டு வெளியேறி வருவது போன்ற காரணங்களால், புரட்டாசி முடிந்தாலும், இனி வரும் நாட்களில், முந்தைய ஆண்டுகள் போல், எதிர்பார்த்த கூட்டம் இராது என, மீனவர்கள் கூறினர்.



குமரேசன் என்பவர் வலையில், 400 கிலோ ராட்சத ஏமங்கோலா மீன் பிடிபட்டது. அதை, காசிமேடை சேர்ந்த, சுரேஷ் என்பவர், 40 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.மீன் பெயர் ( 1 கிலோ) கடந்த வாரம் (ரூ.) நேற்று (ரூ.)வஞ்சரம் 470 - 500 550நண்டு 160 200கடமா 130 180சங்கரா 165 - 170 210பாறை 280 350கறுப்பு வவ்வால் 430 500பால் சுறா 330 330 - 350இறா பெரியது 1,050 1,200இறா சிறியது 320 370மயில் கோலா 80 100ஏமங்கோலா 70 100வரி சுறா 70 100மத்தி 60 100

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X