| கொரட்டூர் வாலிபர் வெட்டிக் கொலை Dinamalar
கொரட்டூர் வாலிபர் வெட்டிக் கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2019
04:06

கொரட்டூர் : கள்ளத்தொடர்பு பிரச்னையால், வாலிபர் வெட்டிக் கொல்லப்பட்டார்.



சென்னை கொளத்துார், ரெட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், 31; பழைய குற்றவாளி. அவர், கொரட்டூரில் ஆட்டோ ஓட்டி வந்தார்.அவர், 14ம் தேதி முதல் காணவில்லை என, கொளத்துாரில், வசிக்கும் அவரது, தாய் கலா, 51, கொரட்டூர் போலீசில் புகார் செய்தார்.சுரேஷை, போலீசார் தேடி வந்த நிலையில், அவரது சடலம், செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் அருகே, முட்புதரில் இருப்பது தெரிந்தது.



விசாரணையில், கொரட்டூர், பாடி, கலைவாணர் நகர், பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெண்ணுடன், சுரேஷ், கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.அங்கு ஏற்பட்ட பிரச்னையால், அவர் வெட்டிக் கொல்லப்பட்டது, விசாரணையில் தெரிய வந்தது.இதையடுத்து, சடலத்தை மீட்க, நடவடிக்கை மேற்கொண்ட கொரட்டூர் போலீசார், தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X