சில தனியார் மருத்துவமனையில் நடக்கும் விஷயங்கள்...! பீதியை கிளப்புகிறார் திவ்யா சத்யராஜ்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2019
04:14

நடிகர் சத்யராஜின் மகள், திவ்யா; பிரபல ஊட்டச்சத்து நிபுணர். சில தனியார் மருத்துவமனையில் நடக்கும் விஷயங்கள், பயங்கரமாக இருக்கிறது என, பீதியை கிளப்புகிறார்.அவருடன் பேசியதிலிருந்து:பிரபல நடிகரின் மகளான நீங்கள், மருத்துவம் சார்ந்த துறையை தேர்ந்தெடுத்தது ஏன்?சிறுவயதில் இருந்தே, உடல்நலனில் அதிக அக்கறை எடுத்து கொள்வேன். நம் வாழ்க்கைக்கு முக்கிய தேவை இரண்டு. ஒன்று உடல் ஆரோக்கியம்; மற்றொன்று பணம். உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான், உழைக்க முடியும்; பணம் சம்பாதிக்க முடியும். அந்த அடிப்படையில் தான், ஊட்டச்சத்து நிபுணர் ஆனேன். இது, என் கனவும் கூட.மருத்துவமனைகளில் ஆராய்ச்சி துவங்குவதற்கான காரணம்?


குறைந்த வருமானம் உள்ளோரும், ஆரோக்கியமாக இருக்கும் வகையில், மருத்துவர்கள் செயல்பட வேண்டும். இதன் அடிப்படையில், அரசு மருத்துவமனையில், என் ஆராய்ச்சியை துவக்கினேன். இதில், நிறைய விஷயங்கள் கிடைத்தன. ஐந்தில், மூன்று கர்ப்பிணிகள், இரும்புச்சத்து குறைபாடுடன் உள்ளனர். மருத்துவமனைகளில், அதற்கான பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. மருத்துவமனை வளாகம் மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகளில், போதிய சுகாதாரம் இல்லை. தலையணை, போர்வை வசதிகளும் போதுமானதாக இல்லை. மழைக்காலத்தில் வரும் நோய்களை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகளும் போதிய அளவு இல்லை. மருத்துவமனை மற்றும் மருந்தகங்களில், சில மருந்துகள் காலாவதியான பின்னும் விற்கப்படுகின்றன. இது குறித்த விழிப்புணர்வு, மக்களிடம் போதிய அளவு இல்லை. இந்த விஷயத்தில், வியாபாரிகளும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இதுபோன்ற பல விஷயங்கள், என் ஆராய்ச்சியில் தெரியவந்தன.மருத்துவமனை குறித்து உங்கள் பொதுவான கருத்து?


மருத்துவமனைக்கு சென்றால், நோய் அதிகமாகும் அல்லது பர்ஸ் காலியாகும் என்ற எண்ணமே, இப்போது பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திலும், யாருக்காவது ஒருவருக்கு நிச்சயமாக, இதுபோன்ற கசப்பான அனுபவம் ஏற்பட்டிருக்கும்.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்...


சுகாதார அடிப்படையில், அரசு மருத்துவமனைகள் பின்தங்கியிருந்தாலும், பல விஷயங்களில், மருத்துவத்தில் சிறப்பாக செயல்படுகின்றன. சுகாதார விஷயத்தை எளிதில் மாற்றி விடலாம். தனியார் மருத்துவமனையை பொறுத்தவரை, சிலவற்றின் செயல்பாடு மிகவும் பயங்கரமாக இருக்கிறது. நான் பிரதமருக்கு கடிதம் எழுதியதற்கு முக்கிய காரணமே, சில மருந்துகளும், சில தனியார் மருத்துவமனையின் செயல்பாடுகளும் தான். எனக்கு தெரிந்த நபரின் உறவினர் ஒருவர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அஜீரண கோளாறால் பாதித்த அவருக்கு, நான்கு முறை, எம்.ஆர்.ஐ., - இரண்டு முறை, சி.டி., ஸ்கேன் எடுத்துள்ளனர். தனியார் மருத்துவமனைகள், மக்களை பணம் கறக்கும் இயந்திரமாக தான் பார்க்கின்றன.பிரதமருக்கு கடிதம் எழுதியதன் விளைவு?


என் கடிதத்திற்கு, பிரதமரிடம் இருந்து, எந்த பதிலும் வரவில்லை. ஆனால், நான் குறிப்பிட்டு எழுதிய அந்த மருந்து விற்பனை நிறுத்தப்பட்டது.ஆரோக்கிய வாழ்க்கைக்கு கடைப்பிடிக்க வேண்டியவை என்ன?


வெளியில் சாப்பிடுவதை, வாரத்தில் ஒரு நாள் மட்டுமே வைத்து கொள்ள வேண்டும். போதுமானவரை, வீட்டில் சமைத்த உணவுகளையே சாப்பிட வேண்டும். அஜினமோட்டோ, நுாடுல்ஸ் பயன்படுத்துவதில், அதிக கவனம் தேவை.திடீரென அரசியல் பக்கம் உங்கள் கவனம் சென்றது ஏன்?


நம் நாட்டில், 39.4 சதவீத குழந்தைகளுக்கு போதுமான வளர்ச்சி இல்லை. அதே போல், 12 - 23 மாத குழந்தைகளில், 62 சதவீத குழந்தைகளுக்கு மட்டுமே, தடுப்பூசி கிடைக்கிறது. இது போன்ற குறைகளை போக்க, நான், 'வேர்ல்ட் விஷன்' அமைப்போடு இணைந்து, ஆராய்ச்சி செய்து வருகிறேன்.நான் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பதால், என் கவனம் உடல் ஆரோக்கியம் மீது மட்டுமே இருக்கிறது. சுகாதார அமைப்பின் மேல், மக்களுக்கு பெரிய அளவில் நம்பிக்கை இல்லை. இதை, மாற்ற வேண்டும். அரசியல்வாதிகள், தங்களை பிரபலப்படுத்துவதிலேயே கவனம் கொள்கின்றனர்; மக்களை கண்டுகொள்வதில்லை. நாம் ஒரு அமைப்பில் இருந்தால் தான், எந்த ஒரு சிஸ்டத்தையும் மேம்படுத்த முடியும் என்பதை உணர்ந்தேன். இதற்கான முதற்கட்ட வேலைகளை ஆரம்பித்து விட்டேன்.அப்படி என்றால், இனி நீங்களும் 'டுவிட்டர்' அரசியலில் இறங்கி விடுவீர்கள்... அப்படித்தானே?


'இன்ஸ்டாகிராம், டுவிட்டர்' தான், களம் என, பலர் நினைக்கின்றனர். நான் எந்த சமூக வலைதளத்திலும் இல்லை. சமீபத்தில் ஊட்டச்சத்து தொடர்பாக, நான், 'யூ டியூப்'பில் வெளியிட்ட வீடியோவில் சிலர், 'நீங்கள் அணிந்திருந்த சுடிதார், கம்மல் நன்றாக இருக்கிறது' என, கமென்ட் செய்திருந்தனர்.நாம் சொல்ல வந்த விஷயம், சில நேரம் மாறிப்போவதால், என் துறை சார்ந்த விஷயங்களை, சமூக வலைதளங்களில் பதிவிடுவதில்லை. மக்களை நேரடியாக சந்தித்து பேசுவதே எனக்கு பிடிக்கும். அப்போது தான், அதன் பலன், மக்களை எளிதில் சென்றடையும்.இதுவரை சம்பாதித்தது?


அனைத்தையும் நான் வெளிப்படையாக பேசுவதாலும், டாக்டர்கள் சிலர் வியாபாரம் சார்ந்து இருப்பதாலும், 90 டாக்டர்களில், 70 பேருக்கு என்னை பிடிக்காது.அரசியலில் பிடித்த தலைவர்?


நான் கம்யூனிசம் படித்து வளர்ந்தவள். கம்யூனிசம் மிகவும் பிடிக்கும். எனக்கு பிடித்த தலைவர் நல்லக்கண்ணு அய்யா. நிச்சயம் நான் அரசியலுக்கு வருவேன்; அதுகுறித்து, விரைவில் அறிவிப்பேன்.உங்களுக்கு அப்பாவின் ஆதரவு எப்படி உள்ளது?


அப்பாவின் பெயர், புகழ், பணம் ஆகியவற்றை, நான், என் அரசியல் வளர்ச்சிக்காக பயன்படுத்த மாட்டேன். என் உயிர் தோழன் என் அப்பா.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (24)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kathiresan - Chennai,இந்தியா
27-அக்-201917:08:58 IST Report Abuse
Kathiresan "அஜீரண கோளாறால் பாதித்த அவருக்கு, நான்கு முறை, எம்.ஆர்.ஐ., - இரண்டு முறை, சி.டி., ஸ்கேன் எடுத்துள்ளனர். தனியார் மருத்துவமனைகள், மக்களை பணம் கறக்கும் இயந்திரமாக தான் பார்க்கின்றன." - Ramana movie style... Pathetic...
Rate this:
Cancel
Naga - Muscat,ஓமன்
27-அக்-201915:09:33 IST Report Abuse
Naga இவர் சொல்வதை பார்க்கும் போது, உண்மையில் நாம் அனைவரும் நாம் பாராட்ட படவேண்டியவர்போல. ஒரு சிலரே இவர் செய்யும் சேவைய் போல் நல்லது செய்கிறார்கள்.
Rate this:
Cancel
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
26-அக்-201919:10:42 IST Report Abuse
தாமரை செல்வன்-பழநி உன்னோட அத்தை நடத்தும் தனியார் ஆஸ்பத்திரி பற்றித்தான் உண்மையைச் சொன்னதாக நினைக்கிறேன்.
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
27-அக்-201910:47:11 IST Report Abuse
Sridharஅது இவங்க தாத்தா கட்டுன ஹாஸ்பிடலுங்கோ பாவம் நல்ல சேவை மனப்பான்மை இருக்குதேன்னு நினைக்கும் போதே நச்சுனு கம்யூனிஸ்டுன்னு சொல்லி நல்ல பேரை கெடுத்துகிச்சு....
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
28-அக்-201904:51:41 IST Report Abuse
skv srinivasankrishnaveniகம்யுனிஸ்டுன்னா கெட்டபெயரா ?????///கம்யூனிசம் வேறு கம்யூனிஸ்ட் வேறு எல்லோரும் சமமாயிருக்கணும் என்று சொல்வது கம்யூனிசம் கம்யூனிஸ்டுகள் செய்வதெல்லாம் வேறும் புளுகுகளே தான் புரிஞ்சுக்குங்க பல தனியார் ஆசுபத்திரிகள் பணமேதான் பிரதானம் என்று செயல்படுத்துங்க . ஸ்கேன் ECG எக்ஸரே லொட்டுலொசுக்குன்னு பணம் பிடுங்கிட்டு கடைசில வெறும் காஸ் ட்ராபிள்தான் என்று சொல்லுவானுக பாருங்க பேஷன்டஸ் பனம்பொரட்டி கட்டி கடனை ஆயுளுக்கும் கட்டிண்டு திரியவேண்டும் . இதற்கு ஆயுர்வேதம் 90%தேவலீங்கோ அனாவசு=ஐயா ஆபரேஷன் பண்ணி வயத்தைக்கிழிக்கறதில்லீங்க . தேவையில்லாமல் மருந்துகள்தருவதேஇல்லீங்க முக்கியமா பக்கவிளைவு இல்லீங்களே.மேக்சிமம் மூலிகைகளேதான் கஷாயம் சூரணம்களேதான் இப்போதுதான் கேப்சூல் கல்தரங்க. உணவே மருந்து இது 100%உண்மை . அதுபோல ஹோமியோபதியும் நிதானமா தான் குணம் தெரியும் ஆனால் பூரணமாகுணம் ஆயிடும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X