சபையோர் முன் வாசிக்கத் தெரியாமல் நிற்பவனே நல்ல மரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2019
04:18

'கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்அவையல்ல நல்ல மரங்கள் சபைநடுவேநீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறியமாட்டா தவன்நல் மரம்'அதாவது, கிளைத்து, தழைத்து நிற்பவை எல்லாம் மரங்கள் அல்ல; சபையோர் முன் வாசிக்கத் தெரியாமல் நிற்பவனே நல்ல மரம் என்பாள், மூதுரை மூதாட்டி அவ்வை.



அந்த வரிகள் உண்மை தான். நாங்கள், மரங்களைப் போலத் தான், கல்வியறிவின்மையால், நாங்கள் அழிக்கப்பட்டது கூட அறியாமல், உணர்வற்ற மரமாய் நின்றோம் என்றனர், சமீபத்தில், சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய ஆயிரக்கணக்கானோர். ஆம். அவர்கள், தமிழகம் முழுதும் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டவர்கள். அவர்களின் கடந்த கால வாழக்கை எப்படிப்பட்டது என்பதற்கு, ஒருபானை சோற்றில், ஒரு சோறு பதமாய், ஒருவரின் வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை இங்கு பார்ப்போம்.திருவள்ளூர் மாவட்டத்தில், மீட்கப்பட்ட கொத்தடிமைகளின் மத்தியில், பம்பரமாய் சுழன்றுகொண்டிருந்தார், 38 வயதான வரலட்சுமி. அவர் சொன்ன கதையின் கறுப்பு வெள்ளை காட்சிகள் இனி.அது, 1990களின் காலகட்டம். வரலட்சுமிக்கு வயது, 13. அவர் மனதை பறித்த கோபாலுக்கு வயது, 20. காதல், இருவரையும் ஒன்று சேர்க்க, கல்வியறிவற்ற, இருவரும், திருப்பதிக்கு சென்று, திருமணம் செய்து, சொந்த ஊரான, திருவள்ளூர் மாவட்டம், கனிகாபுரம் ஊராட்சி, கங்காநகரத்திற்கு வருகின்றனர்; வறுமை வாட்டுகிறது.அருகில் உள்ள நவீன அரிசி ஆலையிலிருந்து வந்த ஒருவர், அவர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, முன்பணமாக, 5,000 ரூபாயை தருகிறார். வெளிச்சம் வெகு அருகில் வந்து விட்டதாக குதுாகலத்தில், வாங்கிய பணத்திலிருந்து, குடும்பத்துக்கான பொருட்களை வாங்குகின்றனர்.கடன் முடிந்தபாடில்லைசந்தோஷமாக இருவரும் அரிசி ஆலை வேலைக்கு செல்கின்றனர்.அரிசி ஆலையில், நெல் அவித்து, காய வைக்கும் வேலை வரலட்சுமிக்கு. நெல் மூட்டைகளை, கொட்டுவது, அள்ளுவது, ஏற்றுவது, அரிசியாக்குவது உள்ளிட்ட வேலைகள், கோபாலுக்கு. கைநீட்டி வாங்கிய காசுக்கு, வேலை செய்து விட்டு கிளம்பலாம் என்பது தான், இருவரின் திட்டம்.நாட்கள் ஓடின, மாதங்கள் உருண்டன, ஆண்டுகள் வந்தன. 5,000 ரூபாய் கடன் மட்டும் முடிந்தபாடில்லை.இந்த காலகட்டத்தில், உறவினர்களைப் பார்க்கவோ, நல்லது கெட்டது என, எந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியிலும் தம்பதியர் இணைந்து பங்கேற்கவோ வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில், வரலட்சுமியின் வயிற்றில் வளரும் சிசுவுக்கு தேவையான ஊட்டச்சத்துக் கூட கிடைக்கவில்லை. போதிய ஓய்வில்லை. எப்போதும் வேலை, வேலை, வேலை தான். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போது, பிரசவம் பார்க்க கூட ஆளில்லாத நிலையில், மருத்துவமனை செல்ல அனுமதி கேட்கின்றனர்; கிடைக்கவில்லை.யாருக்கும் தெரியாமல், அரசு மருத்துவமனைக்குச் செல்கிறார். வரலட்சுமி. உடனே, அறுவை செய்து சிசுவை எடுக்க வேண்டும் என்கின்றனர், மருத்துவர்கள்.அனுமதி பெற்று வருவதாகக் கூறி, மாற்றுத்துணி கூட வழியில்லாத மனைவியை மருத்துவமனையில் விட்டுப் பிரிகிறார், கோபால்; போனவர் வரவில்லை.கோபாலின் கையெழுத்துக்காக சிசேரியனுக்கு தாமதமாகிறது. வரலட்சுமியின் பக்கத்து படுக்கையில் இருந்த பெண்ணின் பாட்டி, கையெழுத்திட்டு, சிசேரியனுக்கான பொறுப்பை ஏற்கிறார்.மூன்றாம் நாள், தான் பிரசவித்த பெண் குழந்தையுடன், வரலட்சுமி நெல் அறவை ஆலைக்கு செல்கிறார். மனைவி, மகளைப் பார்க்கக் கூட, கோபாலுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. குழந்தை பெற்ற எட்டாம் நாள், வரலட்சுமிக்கு, இரவெல்லாம், அடுப்பில் உமி துாவி, நெல் அவிக்கும் பணி கொடுக்கப்படுகிறது. பால் கொடுத்த களைப்பில், கண்ணயர்கிறார். உமியில் ஊடுருவிய கங்கு, வரலட்சுமியின் தலைமுடியை கருக்கி, கண் வரை, தோலை உரித்து விடுகிறது. கேள்விப்பட்ட கணவர், மனைவியின் மீது தண்ணீரை ஊற்றி, தீயை அணைக்கிறார். உமியை நனைத்த கடனுக்காக, இன்னும் பல ஆண்டுகள் வேலை பார்க்க வேண்டும் என, நிர்வாகம் கட்டளை இடுகிறது.12 வயதில் திருமணம்அப்போது, குழந்தைக்கு 5 வயது. யாருக்கும் தெரியாமல், பெண் குழந்தையை, பக்கத்து ஊரில் உள்ள பள்ளி விடுதியில் சேர்த்து, படிக்க வைக்கின்றனர். அவள், ஐந்தாம் வகுப்பு விடுமுறையில், பெற்றோரைப் பார்க்க வருகிறாள். அவளையும், கடனுக்கு உழைக்க பணிக்கின்றனர். அதன்பின், வெளிக் கதவுகள், நிரந்தரமாக பூட்டப்படுகின்றன.குழந்தை பருவமடைகிறாள். தன்னை மீட்கும் படி, அவள் காதலிக்கும் இளைஞனிடம் கெஞ்சுகிறாள். 12 வயதில் திருமணம் செய்து கொண்டு, காதலன் வீட்டுக்கு செல்கிறாள். கொத்தடிமைகள் விடுவிப்புஅங்குவரும், ஆலை நிர்வாகிகள், பெண்ணை மட்டும் பிரித்து மறுபடியும் ஆலையில் அடைக்கின்றனர். 15 ஆண்டுகள் ஆகும் நிலையில், மூவர் உழைத்தும், 5,000 ரூபாய் கடனை அடைக்க முடிய வில்லை. மூவருக்கும், வாழ்க்கை இப்போது இருட்டாகிறது. இப்படியாக, 50 பேர், அந்த ஆலையில், அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர்.ஒருநாள், அந்த ஆலைக்கு வரும் அதிகாரிகள், கொத்தடிமைகளிடம் விசாரிக்கின்றனர். அவர்கள் தங்களின் கதைகளை கண்ணீரால் மொழிபெயர்க்கின்றனர்; அரசு உதவுகிறது. அவர்களுக்கு, ஐ.ஜே.எம்., என்ற, பன்னாட்டு தொண்டு நிறுவனமும், உதவ முன் வருகிறது; கொத்தடிமைகள் விடுவிக்கப்படுகின்றனர்.இது தான், அவர் சொன்ன கதை.இப்போது, வரலட்சுமி என்னவாக இருக்கிறார் தெரியுமா?அவர், 100க்கும் மேற்பட்ட, மீட்கப்பட்ட இருளர் சமூக மக்களுக்கு, தலைவியாக இருக்கிறார். அவரால், இதுவரை, 38 பேருக்கு, வீட்டுமனை பட்டாக்கள்; 165 பேருக்கு, ஆதார் அட்டைகள், 28 பேருக்கு குடும்ப அட்டைகள்; 150 பேருக்கு, ஓட்டுரிமை; 200 பேருக்கு, சாதிச் சான்றிதழ், 18 சிறுவர்களுக்கு பள்ளி சேர்க்கை என, பல நன்மைகள் கிடைத்திருக்கின்றன. அவர், 18 குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி, படிப்பை தொடரச் செய்திருக்கிறார்.இனி, 'எங்கள் தலைமுறை, யாரிடமும் கைநீட்டி கடன் வாங்காது. வங்கிக் கடனையும், அரசு சலுகையையும் வைத்து முன்னேறும். குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது மட்டுமே எங்கள் லட்சியம்' என்றார், வரலட்சுமி. அதை, அங்கிருந்தோர் வழிமொழிந்தனர்.இன்னும், பாத்திரக்கடைகள், செங்கல் சூளைகள், மரம் வெட்டுதல், விவசாய வேலைகள் என, தலைமுறை தலைமுறையாக அடிமை சங்கிலியை சுமந்துள்ளனர். அவர்களையும் விடுவிக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.அன்றைய நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டி யராஜன், ''இரண்டாண்டுகளில் கொத்தடிமைகள் மீட்கப்படுவர்; பெண்கள் முன்னேற்றத்துக்காக, தமிழக அரசு, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது,'' என்றார்.ஒளி பரவட்டும்!

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X