கராத்தே போட்டி: மணலி மாணவர்கள் அசத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2019
04:25

மணலி: சர்வதேச கராத்தே போட்டியில், தங்கம், வெண்கலப் பதக்கங்கள் வென்று, மணலி மாணவர்கள் அசத்தியுள்ளனர்.



மலேஷியாவில், ஐந்தாவது டபிள்யு.ஜி.கே.எப்., சாம்பியன்ஷிப் சர்வதேச கராத்தே போட்டி, செப்., 19 - 22ல் நடைபெற்றது. இதில், 32 நாடுகள் பங்கேற்றன.இந்தியாவில் இருந்து, 72 பேர் பங்கேற்றனர். அதில், 'ஒக்கினாவா கோஷிக் கோஜோ - ரியோ கராத்தே டு ஷிரேன் - இந்தியா' என்ற கராத்தே பள்ளியின், மணலி, மாதவரத்தைச் சேர்ந்த, ஏழு மாணவர்களும் பங்கேற்றனர்.இவர்களில், ஒன்பதாம் வகுப்பு மாணவி, கே.அஷ்விதா, 12 - 13 வயதிற்கு உட்பட்ட குழு குமிட்டே பிரிவில், தங்கமும், தனிநபர் குமிட்டே பிரிவில் வெண்கலமும் வென்றார்.மற்றொரு, ஒன்பதாம் வகுப்பு மாணவர், ஏ. வீரேஷ்வரன், - 40 கிலோ பிரிவில் வெண்கலமும், எட்டாம் வகுப்பு மாணவர், ஜி.காமேஷ், 50 கிலோவிற்கு மேற்பட்டோர் பிரிவில் வெண்கலமும் வென்றன.இவர்களோடு சேர்த்து, இந்தியா, 10 தங்கம், 17 வெள்ளி, 22 வெண்கலத்துடன் மூன்றாவது இடத்தை பிடித்தது.



பதக்கம் வென்றவர்களுக்கான பாராட்டு விழா மற்றும் கராத்தே பள்ளியில் சிறப்பாக பயிற்சி முடித்த மாணவர்களுக்கு, 'பிளாக் பெல்ட்' வழங்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் இரவு, மணலி, தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.இதில், சர்வதேச போட்டியில் பங்கேற்று, பதக்கம் வென்ற மாணவர்களுக்கு, கோப்பை வழங்கி, பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டது.விழாவில், மணலி காவல் ஆய்வாளர் கண்ணகி, கிராண்ட் மாஸ்டர் அன்பழகன், கராத்தே பள்ளி மாஸ்டர் குப்புராஜ் மற்றும் பெற்றோர் என, ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X