மாமியாரை கொன்ற மருமகன்; மனைவியை பார்க்க வந்து சிக்கினார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2019
08:15

சங்ககிரி: சங்ககிரி, மோரூர் கிழக்கு ஊராட்சி, புள்ளிபாளையம், பாப்பான்காட்டைச் சேர்ந்த, விவசாயி பேபி, 55. இவரது மகள் தீபா, 31. இவரது கணவர் நடராஜ், எட்டாண்டுக்கு முன் இறந்ததால், தன் இரு பெண் குழந்தைகளை காப்பாற்ற, வெப்படையிலுள்ள தனியார் நூல் மில்லுக்கு, தீபா வேலைக்கு சென்றுவந்தார். மூன்றாண்டுக்கு முன், தீபா, வேலூர் மாவட்டம், துறைப்பாடியைச் சேர்ந்த, லாரி டிரைவர் கணபதி, 34, ஆகியோருக்கு திருமணமானது. ஆனால், கணபதி குடித்துவிட்டு, சரியாக பணிக்கு செல்லாததால், ஆறு மாதத்துக்கு முன், தீபா, கோபித்துக்கொண்டு, புள்ளிபாளையத்திலுள்ள தாய் வீட்டுக்கு, குழந்தைகளுடன் வந்து விட்டார். பின், அங்கு வந்த கணபதி, மனைவியை குடும்பம் நடத்த அழைத்தபோது, மாமியார் பேபி திட்டி அனுப்பினார். இந்த ஆத்திரத்தில், கடந்த செப்., 23ல், தீபா வேலைக்கு சென்ற நிலையில், கணபதி, பேபியை கழுத்தை நெரித்து கொன்று விட்டு தப்பினார். சங்ககிரி போலீசார், கணபதியை தேடிவந்தனர். நேற்று காலை, 9:00 மணிக்கு, புள்ளிபாளையம் பஸ் ஸ்டாப் அருகே, அவர் செல்வது குறித்து, சங்ககிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற போலீசார், அவரை பிடித்து விசாரித்தபோது, ஒரு மாதமாக, திருப்பதியில் தங்கியிருந்ததாகவும், மனைவியை பார்க்க வந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X