காவலர் குடியிருப்பு கட்டடத்தில் விரிசல்: அரச மரத்தை அலட்சியமாக விட்டதால் திக்... திக்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2019
08:15

மேட்டூர்: அரசமரத்தை அலட்சியமாக விட்டதால், காவலர் குடியிருப்பு கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அங்கு வசிப்போர் அச்சமடைகின்றனர்.


காவலர் வீட்டுவசதி வாரியம் சார்பில், மேட்டூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, ஸ்டேட் வங்கி பின்புறம், 20 ஆண்டுக்கு முன், 24 குடியிருப்புகள் கட்டப்பட்டன. மேட்டூர், கொளத்தூர் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீசார் தங்கியுள்ளனர். ஆனால், குடியிருப்பை பராமரிக்காததால், கட்டடத்தில் ஆங்காங்கே அரச மரக்கன்றுகள் வளர்ந்து விரிசலை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, குடியிருப்பு பின்புற கட்டடத்தில், ஆளுயரத்துக்கு மேல் அரச மரம் வளர்ந்து, அதன் வேர்கள், கட்டடத்தின் உள்பகுதியில் நுழைந்துவிட்டது. இதனால், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, இடியும் நிலையில் உள்ளது. நேற்று மதியம், காவலர்கள் எடுத்த நடவடிக்கையால், சில தொழிலாளர்கள், அரசமர கிளைகளை வெட்டி அகற்றினர். ஆனால், மரத்தின் வேர், தண்டுப்பகுதி சுவரின் உள்பகுதியில் இருப்பதால், முழுமையாக அகற்ற முடியவில்லை. இதை வெட்டினால் கட்டடம் பாதிக்கும் என்பதால், தொழிலாளர்கள் அப்படியே விட்டுச்சென்றனர். இதை, முன்கூட்டியே அறிந்து, காவலர் வீட்டுவசதி வாரியம் நடவடிக்கை எடுக்காததால், காவலர் குடியிருப்பு கட்டடம் எந்த நேரத்திலும் சேதமாகும் அபாயம் உள்ளதால், அங்கு வசிப்போர் கலக்கமடைந்துள்ளனர்.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X