| குளிப்பதற்கான தடை விலகியும் கொடிவேரி தடுப்பணை 'வெறிச்' Dinamalar
குளிப்பதற்கான தடை விலகியும் கொடிவேரி தடுப்பணை 'வெறிச்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2019
10:09

கோபி: குளிப்பதற்கான தடை நீங்கியும், கொடிவேரி தடுப்பணை வெறிச்சோடியது. ஈரோடு மாவட்டம், கோபி அருகே கொடிவேரியில், கடந்த, 18ம் தேதி இரவு, 55.2 மி.மீ., மழை பெய்தது. இதனால் கொடிவேரி தடுப்பணைக்கு, வினாடிக்கு 5,250 கன அடி மழைநீர் வரத்தானதால், பொதுப்பணித்துறையினர் நேற்று முன்தினம், குளிக்க தடை விதித்தனர். நேற்று மழை இல்லாததால், நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. காலை, 8:00 மணிக்கு, 450 கன அடி நீரே, தடுப்பணை வழியாக பவானி ஆற்றில் வெளியேறியது. இதனால் காலை, 8:30 மணி முதல், தடுப்பணையில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை, அதிகாரிகள் நீக்கினர். அதேசமயம் மழைநீர் செந்நிறமாக அருவியில் வெளியேறியதால், குறைந்தளவே பயணிகளே வந்தனர். விடுமுறை நாளாக இருந்தும், அணைப்பகுதி வெறிச்சோடியது. அதேசமயம், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு, ஒன்பதாவது நாளாக நேற்றும், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X