நடப்பாண்டில் முதல் முறை பவானிசாகர் நீர்மட்டம் 100 அடியை தொட்டது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2019
10:09

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அணை நீர்மட்டம், நடப்பாண்டில் முதல்முறையாக, 100 அடியை எட்டியது.


ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, 105 அடி உயரம்; 32.8 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. நீர்பிடிப்பு பகுதியான, நீலகிரி மலைப்பகுதியில், கனமழை கொட்டுவதால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வினாடிக்கு, 9,986 கன அடி நீர் வந்தது. இதனால் அணை நீர்மட்டம், 100 அடியை தொட்டது. கடந்த, 2018 ஆக.,14ல், தென்மேற்கு பருவமழையால், 100 அடியை தொட்ட நீர்மட்டம், அன்றிரவே, 103 அடியை எட்டியது. அதன்பின் பாசனங்களுக்கு திறக்கப்பட்டதால், நீர்மட்டம் சரிந்தது. மீண்டும், 2018, அக்., 2ல், 100 அடியை தொட்டது. இந்நிலையில் நடப்பாண்டில், முதல்முறையாக, 100 அடியை நேற்று கடந்தது. இதனால் உபரிநீர் வெளியேறும், ஒன்பது கண் மதகு ஷட்டர் மேற்பகுதி வரை, தண்ணீர் தேங்கி, கடல்போல் அணை காட்சியளிக்கிறது. நேற்று மாலை, 4:00 மணி நிலவரப்படி, அணை நீர்மட்டம், 100.40 அடி, நீர் இருப்பு, 29 டி.எம்.சி., யாக இருந்தது.


உபரிநீர் திறக்க வாய்ப்பு; வெள்ள அபாய எச்சரிக்கை: பவானிசாகர் அணை நீர்மட்டம், 100 அடியை கடந்த நிலையில், நீர்வரத்து, 9,986 கன அடியாக உள்ளது. பில்லூர் அணையில் இருந்து, தொடர்ந்து நீர் திறக்கப்படுவதால், அணை நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது. நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில், இன்று மாலைக்குள், பவானிசாகர் அணையில் இருந்து உபரிநீர், பவானி ஆற்றில் திறக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் பவானி ஆற்றங்கரையோர மக்கள், பாதுகாப்பான இடம் நோக்கி செல்ல, தண்டோரோ மூலம் நேற்று எச்சரிக்கை விடப்பட்டது. குறிப்பாக, கரையோர கிராமங்களான, பகுடுதுறை, தொட்டம்பாளையம், வெள்ளியம்பாளையம், இக்கரை தத்தப்பள்ளி, பகுத்தம்பாளையம், அக்கரை தத்தப்பள்ளி பகுதி மக்களுக்கு, தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


 

Advertisement
மேலும் ஈரோடு மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X