ஐம்பொன் பட்டனுடன் ஆபரண வெள்ளை சட்டை: இந்தியாவில் முதல்முறையாக சேலத்தில் அறிமுகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

21 அக்
2019
11:34
பதிவு செய்த நாள்
அக் 21,2019 10:12

சேலம்: இந்தியாவிலேயே முதல்முறையாக, சேலத்தில் ஐம்பொன், நவரத்தின, ராசி கற்கள் பட்டன் அடங்கிய ஆபரண சட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


சேலம், அம்மாபேட்டை, குலசேகர ஆழ்வார் தெருவை சேர்ந்தவர் தினகரன், 58; நீண்ட காலமாக ஜவுளி உற்பத்தியில் ஈடுபடும் இவர், தொழிலில் பல புதுமையை புகுத்தி வருகிறார். தற்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.



இதுகுறித்து, அவர் கூறியதாவது: வெள்ளை வேட்டி, சட்டை பிரியர்களுக்கு, ஐம்பொன், நவரத்தின கற்கள், ராசி கற்களை பட்டனாக கொண்ட ஆபரண சட்டைகளை, இந்தியாவிலேயே முதல்முறையாக சேலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. செம்பு, தாமிரம், வெள்ளீயம், வெள்ளி, தங்கம் ஆகியவற்றை கொண்ட ஐம்பொன் பட்டன்களில், தங்க முலாம் பூசி, பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ள வெள்ளை சட்டைகள் விற்பனைக்கு கிடைக்கும். உயர் ரக வெள்ளை துணிகளை பயன்படுத்தி, 40, 42, 44 செ.மீ., அளவுகளில் தையல் தொழிலாளர்களால் சட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. அதில், ஐம்பொன், நவரத்தின கற்கள், ராசி கற்களை கொண்ட பட்டன்கள் பொருத்தப்படுகின்றன. அதன் அரை கை சட்டை, 1,200 முதல், 2,000 ரூபாய், முழுக்கை சட்டை, 1,400 முதல், 2,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கீழடி அகழ்வாராய்ச்சியில் பண்டைய தமிழர்கள், தங்கத்தால் செய்த பட்டன்கள் அடங்கிய சட்டையை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இச்சட்டையை விழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அணிந்து சென்றால், நம் மதிப்பு, மரியாதையை அதிகரிக்க செய்யும். ஐம்பொன் பட்டன் தேவைப்படாதபோது, எடுத்து வைத்துவிட்டு, சாதாரண பிளாஸ்டிக் பட்டன்களை பொருத்தி கொள்ளும்படி, சட்டையில் பட்டன் காஜா வடிவமைக்கப்பட்டுள்ளது. துவைக்கும்போது, 'அயர்ன்' பண்ணும்போது, பட்டன்களை தனியே கழற்றி வைத்து விடலாம். ஐம்பொன், நவரத்தின பட்டன், 50 ஆண்டுகளானாலும் உழைக்கும் திறனுடையது. சட்டையில், இந்து கடவுள்களின் படங்கள், கிறிஸ்தவ, முஸ்லிம் தெய்வ படங்களை பொருத்தி கொடுக்கிறோம். வர்த்தக லோகோ, டிசைன், பெயர்களை தேவைக்கேற்ப ஐம்பொன், நவரத்தின, ராசி கற்களில் கூட பொருத்தி கொடுக்கிறோம். சட்டை தேவைப்படுவோர், அம்மாபேட்டையிலுள்ள வீடு, ஈரோடு மாவட்டம், சித்தோடு, 'டெக்ஸ்ட் வேலி' வணிக வளாக கடை எண்: 1,054ல் வாங்கிக்கொள்ளலாம். ஆர்டர் கொடுத்து பெற விரும்புவோர், 99658 27256 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.



 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X