ஐம்பொன் பட்டனுடன் ஆபரண வெள்ளை சட்டை: இந்தியாவில் முதல்முறையாக சேலத்தில் அறிமுகம் | சேலம் செய்திகள் | Dinamalar
ஐம்பொன் பட்டனுடன் ஆபரண வெள்ளை சட்டை: இந்தியாவில் முதல்முறையாக சேலத்தில் அறிமுகம்
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

21 அக்
2019
11:34
பதிவு செய்த நாள்
அக் 21,2019 10:12

சேலம்: இந்தியாவிலேயே முதல்முறையாக, சேலத்தில் ஐம்பொன், நவரத்தின, ராசி கற்கள் பட்டன் அடங்கிய ஆபரண சட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.


சேலம், அம்மாபேட்டை, குலசேகர ஆழ்வார் தெருவை சேர்ந்தவர் தினகரன், 58; நீண்ட காலமாக ஜவுளி உற்பத்தியில் ஈடுபடும் இவர், தொழிலில் பல புதுமையை புகுத்தி வருகிறார். தற்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய ரகத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.இதுகுறித்து, அவர் கூறியதாவது: வெள்ளை வேட்டி, சட்டை பிரியர்களுக்கு, ஐம்பொன், நவரத்தின கற்கள், ராசி கற்களை பட்டனாக கொண்ட ஆபரண சட்டைகளை, இந்தியாவிலேயே முதல்முறையாக சேலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. செம்பு, தாமிரம், வெள்ளீயம், வெள்ளி, தங்கம் ஆகியவற்றை கொண்ட ஐம்பொன் பட்டன்களில், தங்க முலாம் பூசி, பட்டன்கள் பொருத்தப்பட்டுள்ள வெள்ளை சட்டைகள் விற்பனைக்கு கிடைக்கும். உயர் ரக வெள்ளை துணிகளை பயன்படுத்தி, 40, 42, 44 செ.மீ., அளவுகளில் தையல் தொழிலாளர்களால் சட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. அதில், ஐம்பொன், நவரத்தின கற்கள், ராசி கற்களை கொண்ட பட்டன்கள் பொருத்தப்படுகின்றன. அதன் அரை கை சட்டை, 1,200 முதல், 2,000 ரூபாய், முழுக்கை சட்டை, 1,400 முதல், 2,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கீழடி அகழ்வாராய்ச்சியில் பண்டைய தமிழர்கள், தங்கத்தால் செய்த பட்டன்கள் அடங்கிய சட்டையை பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. இச்சட்டையை விழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகளுக்கு அணிந்து சென்றால், நம் மதிப்பு, மரியாதையை அதிகரிக்க செய்யும். ஐம்பொன் பட்டன் தேவைப்படாதபோது, எடுத்து வைத்துவிட்டு, சாதாரண பிளாஸ்டிக் பட்டன்களை பொருத்தி கொள்ளும்படி, சட்டையில் பட்டன் காஜா வடிவமைக்கப்பட்டுள்ளது. துவைக்கும்போது, 'அயர்ன்' பண்ணும்போது, பட்டன்களை தனியே கழற்றி வைத்து விடலாம். ஐம்பொன், நவரத்தின பட்டன், 50 ஆண்டுகளானாலும் உழைக்கும் திறனுடையது. சட்டையில், இந்து கடவுள்களின் படங்கள், கிறிஸ்தவ, முஸ்லிம் தெய்வ படங்களை பொருத்தி கொடுக்கிறோம். வர்த்தக லோகோ, டிசைன், பெயர்களை தேவைக்கேற்ப ஐம்பொன், நவரத்தின, ராசி கற்களில் கூட பொருத்தி கொடுக்கிறோம். சட்டை தேவைப்படுவோர், அம்மாபேட்டையிலுள்ள வீடு, ஈரோடு மாவட்டம், சித்தோடு, 'டெக்ஸ்ட் வேலி' வணிக வளாக கடை எண்: 1,054ல் வாங்கிக்கொள்ளலாம். ஆர்டர் கொடுத்து பெற விரும்புவோர், 99658 27256 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X