பஸ் கதவை மூடாமல் இயக்கும் டிரைவர், கண்டக்டருக்கு அபராதம் | சேலம் செய்திகள் | Dinamalar
பஸ் கதவை மூடாமல் இயக்கும் டிரைவர், கண்டக்டருக்கு அபராதம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2019
10:12

சேலம்: பஸ் கதவை மூடாமல் இயக்கினால், டிரைவர், கண்டக்டருக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பைபாஸில், கடந்த, 17ல், சேலம் கோட்ட பஸ் சென்றபோது, பின்புற கதவிலிருந்து பெண் ஒருவர் தவறி விழுந்தார். இச்சம்பவத்தையடுத்து, சேலம் கோட்டத்தை சேர்ந்த பஸ் டிரைவர், கண்டக்டர்களுக்கு மேலாண் இயக்குனர் அன்பு ஆபிரகாம் பிறப்பித்த உத்தரவு: பஸ் புறப்படும் நிலையில், டிரைவர், கண்டக்டர்கள் இருபுற கதவுகளையும் முழுமையாக சாத்த வேண்டும். கதவு சாத்தப்படாதது தெரியவந்தால், ஒழுங்கீன நடவடிக்கையாக தலா, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 'மெமோ' வழங்கி, மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளர் சம்மேளன மாநில பொதுச்செயலர் பத்மநாபன் கூறியதாவது: வேலை செய்யாத கதவை ஏன் சாத்தவில்லை என, அதிகாரிகள் நினைத்ததற்கு எல்லாம் ஊழியர்களுக்கு மெமோ கொடுத்து, மன உளைச்சலை ஏற்படுத்துகின்றனர். போக்குவரத்துக்கழக நிர்வாகங்கள், டிரைவர், கண்டக்டர்களுக்கு, நிலையாணையில் (நிரந்தர உத்தரவு, வழிகாட்டி) இல்லாத அபராத தண்டனை வழங்குவது கண்டனத்துக்குரியது. முதலில், அனைத்து பஸ்களின் கதவுகளை ஆய்வுக்கு உட்படுத்தி, குறைகளை களைய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X