| பஸ்கள் மோதல்... பெண்கள் காயம்: பொதுமக்கள் சாலை மறியல் Dinamalar
பஸ்கள் மோதல்... பெண்கள் காயம்: பொதுமக்கள் சாலை மறியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2019
23:15

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன் பாளையத்தில் இருந்து மத்தம்பாளையம் வரை, நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி நடந்து வருகிறது. இதற்காக பல இடங்களில் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றுப்பட்டுள்ளது.இப்பாதையில் கோவை - மேட்டுப்பாளையம் செல்லும் தனியார் பஸ்கள் வேகமாக செல்கின்றன. கடந்த சனிக்கிழமை தனியார் பஸ் மோதியதில், சிவா நகரை சேர்ந்த சுமதிக்கு காயம் ஏற்பட்டது.


நேற்று காலை, இதே பகுதியில் வசிக்கும் வங்கி மேலாளர் லட்சுமி மீது வேறு ஒரு தனியார் பஸ் மோதியது. இதில், காயமடைந்த லட்சுமி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இச்சம்பவங்களால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், நேற்று காலை பிரஸ்காலனியில், சாலைமறியலில் ஈடுபட்டனர்.பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வேகமாக செல்லும் தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X