| பெண்ணிடம் 13 சவரன் திருட்டு Dinamalar
பெண்ணிடம் 13 சவரன் திருட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2019
23:17

கருமத்தம்பட்டி:பஸ்சில் பயணித்த பெண்ணிடம், 13 சவரன் நகை திருடு போனது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.திருப்பூர் மாவட்டம், முத்துாரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மனைவி தமிழரசி, 62. இவர், கடந்த, 19ம் தேதி, திருப்பூரில் இருந்து தனியார் பஸ்சில், தெக்கலுார் நோக்கி வந்தார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது.அவிநாசியை கடந்து பஸ் தெக்கலுாரில் நின்றது. அப்போது, சில வடமாநில வாலிபர்கள் பஸ்சில் இறங்கியுள்ளனர்.அப்போது, 13 சவரன் நகை வைத்திருந்த பேக் மாயமானது கண்டு தமிழரசி அதிர்ச்சியடைந்தார். தன்னுடைய பேக் திருடப்பட்டது குறித்து கருமத்தம்பட்டி போலீசாரிடம் அவர் புகார் தெரிவித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X