அரிசி கடத்தல தடுக்காத தாசில்தார்களுக்கு 'டோஸ்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2019
23:19

பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு பஸ்சில் சென்றேன். 'சார்... எப்டி இருக்கீங்க, பார்த்தே ரொம்ப நாள் ஆச்சு,' என கேட்டார், வருவாய்த்துறை அதிகாரி ஒருவர்.'நீங்க எப்டி இருக்கீங்க. போன வாரம் கலெக்ரேட் பக்கம் நின்னுட்டு இருந்தீங்க, எதாவது விசேஷங்களா,' எனக் கேட்டேன்.'கலெக்ரேட்டுல மீட்டிங் போயிருந்தேன்.


மாவட்டத்துல இருக்கற எல்லா தாசில்தார்களுக்கும், கலெக்டர் செம 'டோஸ்' விட்டாரு. தாசில்தார்கள பார்த்து, 'ஒவ்வொரு வாரமும், 200 - 300 கிலோ ரேஷன் அரிசி பிடிக்கறதா கணக்கு காட்டுறீங்க. ஒரு தடவை கூட கடத்தல் ஆளுங்கள பிடிக்கள. அரிசி கடத்தறவங்கள பிடிக்க ஏன் தயங்குறீங்கனு 'டோஸ்' விட்டாரு,' என்றார்.அரிசி கடத்தல தடுக்காம இருந்ததால, கலெக்டர் பேசனதுக்கு எந்த தாசில்தாரும் பதில் சொல்லாம தலைய தொங்க போட்டுட்டாங்களாம். இனியாவது அரிசி கடத்தல தடுப்பாங்களானு பார்ப்போம்.வாக்குறுதி கொடுத்தவங்கவால்பாறையில காணோம்வால்பாறை காந்திசிலை பஸ்டாண்டில் இருவர் காரசாரமாக பேசிக்கொண்டு வந்ததை கவனித்தேன்.


சுற்றுலா பயணிகளை மனம் கவர்ந்த வால்பாறையில, பகல் நேரத்துல வனவிலங்குக கண்ணில் தென்படுகின்றன. ஆனா, சுற்றுலா பயணிகள் பொழுது போக்க பூங்காவோ, படகு சவாரியோ இல்லை.லோக்சபா தேர்தலுக்கு முன்னாடி, வால்பாறையில நடந்த நிகழ்ச்சியில, நகராட்சி சார்பில பூங்கா, படகு சவாரி அமைப்போம்னு தேர்தலுக்கு முன்னாடி உள்ளாட்சித்துறை அமைச்சரு வாக்குறுதிகளை அள்ளி வீசினாரு.


லோக்சபா தேர்தல் முடிஞ்சு பல மாசமாகியும் அதற்கான அறிகுறியே இல்ல.இப்படியே போச்சுனா, வால்பாறைக்கு சுற்றுலாபயணிகளே வரமாட்டாங்க. இந்த பிரச்னையை தொகுதி எம்.எல்.ஏ.,வும் கண்டுக்கிறதில்லை.ஆளுங்கட்சிக்காரங்களும் வாக்குறுதிய மறந்துட்டாங்க. இதப்பத்தி யாராவது கேள்வி கேட்டா, எப்ப, என்ன செய்யணும்னு எங்களுக்கு தெரியும்னு பேசறாங்க.இப்படி பேசிகிட்டே இருந்தாங்கனா, வர்ற உள்ளாட்சி தேர்தல்ல ஒரு வார்டுல கூட ஜெயிக்கிறது கஷ்டம்தானுங்க, என, பேசிக்கொண்டனர்.


மூட்டையில ஓட்டை போட்டுகிலோ கணக்குல அள்ளறாங்ககிணத்துக்கடவு பக்கத்துல இருக்கற அரசம்பாளையத்துக்கு சென்றபோது, மழைக்கு பஸ் ஸ்டாபில் ஒதுங்கினேன். அங்க, நின்றிருந்தவர் பேசிக்கிட்டதை கேளுங்க.ஊரு எல்லையில, நுகர்பொருள் வாணிப கழக கிடங்கு இருங்கு. இங்கு ரேஷன் அரிசி மூட்டை மூட்டையா இருப்பு வச்சிருக்காங்க.அங்க இருக்கற ஊழியர்கள், ஒவ்வொரு மூட்டையிலயும், ஓட்டை போட்டு ஒவ்வொரு கிலோ எடுக்கறாங்க. இப்படி எடுத்த அரிசிய, மூட்டையாக்கி கள்ளமார்க்கெட்டுல விக்கறாங்க.கேரளாவுக்கு மாமூலா அரிசி கடத்தறவங்க, அதிகாலை நேரத்துல வந்து, கிலோவுக்கு 20 ரூபா கொடுத்து அதிகாரிக கிட்ட இருந்து வாங்கிட்டு போறாங்க.சொலவம்பாளையம், சொக்கனுார், வீரப்பகவுண்டனுார் வழியாக கேரளாவுக்கு மொபட்டுல ரேஷன் அரிசி கடத்தறாங்க.


கடத்தல் அரிசியை தாலுகா அதிகாரிக சில நேரம் பிடிச்சாலும், பறிமுதல் செய்த ரேஷன் அரிசிய மீண்டும் அதே குடோனுக்கு கொண்டு வந்து தான் ஒப்படைக்கறாங்கனு, நாட்டு நடப்பை பேசிக்கிட்டாங்க.சோதனை மேல் சோதனைபோலீஸ் இமேஜ் டமால்பொள்ளாச்சியில் இருந்து ஜமீன் ஊத்துக்குளி வழியாக நண்பருடன் சென்று கொண்டு இருந்தேன்.


அப்ப, நண்பர் சொன்ன விஷயம்பொள்ளாச்சியில, ஜமீன் ஊத்துக்குளி, அம்பராம்பாளையம் சுங்கம் செல்லும் வழியில பல இடத்துல போலீஸ் நின்னு சோதனை செய்யறாங்க.நானும் நல்ல விஷயம்னு நெனச்சேன். ஆனா, சீருடையில இருக்கும் போலீசார், சோதனைங்கற பேருல வசூல் வேட்டையில ஈடுபடுறாங்க.கேரளா வாகனங்களயும், டூவீலர்ல வர்றவங்களயும் குறி வச்சு, வசூல் வேட்டை நடத்துறாங்க. அஞ்சு கி.மீ., பயணத்துல, நாலு இடத்துல வசூல் பண்ணுறாங்க. போலீஸ் இப்படி பண்ணறதால, மக்கள் நொந்து போயிருக்காங்கனு, வருத்தமாக சொன்னாரு.அதிகாரி பேச்சால் சலசலப்புமலைவாழ் மக்கள் புலம்பல்பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், மலைவாழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேம்பாடு கூட்டம் நடந்தது. கூட்டதில் பேசிய மலைவாழ் மக்கள், அடிப்படை வசதிகள் பற்றி பேசினாங்க.அப்போது ஒருத்தர், 'வேட்டை தடுப்பு காவலர்களுக்கு சம்பளம் வருவதில்லை; வேட்டை தடுப்பு காவலர்களாக மலைவாழ் மக்களை நியமிக்கணும்,' என வலியுறுத்தினார்.


அங்க இருந்த வனத்துறை பொறுப்பான அதிகாரி, 'சம்பள பிரச்னைய இங்கெல்லாம் சொல்லி என்ன பண்ண போறாங்க; எங்கிட்ட சொன்னாதான் நடவடிக்கை எடுக்க முடியும்னு,' பட்டுன்னு சொன்னார்.இத கேட்ட வருவாய்துறை அதிகாரிகள், கூட்டத்துல கலந்துக்கிட்டவங்க எல்லாம் அதிர்ச்சியாயிட்டாங்க. மலைவாழ் மக்கள் நிலைமையை சமாளிச்சுட்டு வெளியே வந்தப்ப, இப்படித்தான் சொல்லுவாரு; நேரா போனா பார்க்கக் கூட முடியாதுப்பா,'னு புலம்பிட்டு போனாங்க.


'சீல்' வச்ச கடையை உடைக்க முடியாதா?உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே, நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். 'ஸ்மாக் பார் மேட்டரு எல்லை மீறி போயிட்டு இருக்கு. இதையெல்லாம் செய்தியா போட மாட்டீங்களானு,' கேட்டாரு.அவரு சொன்ன விஷயம் இதோ...உடுமலையில, டாஸ்மாக் மதுக்கடை பார் ஏலம் நடக்கல. பார்கள் வழக்கம் போல் செயல்படும் நிலையில, டாஸ்மாக் அதிகாரிகள், மதுவிலக்கு போலீசார் இணைந்து, பார்களுக்கு 'சீல்' வச்சாங்க.ஆனா, பார் உரிமையாளர்கள் அதிகாரிகள் வச்ச சீல அகற்றாம, பாருக்கு இன்னொரு வழிய வச்சு, வழக்கம் போல் டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களை திறந்து, வியாபாரம் செய்தனர்.


இது பற்றி மக்கள் புகார் செய்தால், அதிகாரிகளும், போலீசாரும் கண்டுக்கறதில்ல. அரசுக்கு வர வேண்டிய வருவாய், மடை மாற்றி, ஆளுங்கட்சிக்காரங்க, அதிகாரிக பாக்கெட்டை நிரப்பிட்டு இருக்குனு, சொன்னாரு.போராடி பிடித்தது'இது'க்குத் தானா?உடுமலை போலீசாரின் தகிடுதத்தம் விளையாட்டு வெளிச்சத்துக்கு வந்திருக்கு என, நண்பர் சொன்னார்.திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில, ஆண்டிபட்டியில, தனியார் 'எம் சாண்ட்' உற்பத்தி தொழிற்சாலை இருக்கு.


அங்க, ஆறு மற்றும் ஓடைகளின் கரையில, மண்ண அள்ளி மணல பிரித்து எடுத்து, கட்டுமான பணிகளுக்கு விற்பனை செய்யறாங்க.'எம் சாண்ட்'னு, கனிம வளத்துறை அனுமதி பெற்று, முறைகேடாக மணல் விற்பனை செய்யறாங்க. இப்படி, உடுமலை வழியா வந்த லாரியை, போலீசார் மடக்கி பிடிச்சாங்க. வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தும், அவங்களும் அங்க ஆஜராயிட்டாங்க.'நாங்க தான் முதலில் பிடிச்சோம்'னு போலீசார் போராடி, லாரிய ஸ்டேஷனுக்கு கொண்டு போனாங்க. மணலுக்கு ஆவணமில்ல. 'எம் சாண்ட்'னு 'பர்மிட்' போட்டிருந்தாங்க. அதுல, லாரி பதிவு எண் மாறியிருந்தது.


அனுமதிக்கப்பட்ட அளவை விட ஓவர் லோடு இருந்தது.ஆனா, போலீசார் இதையெல்லாம் கண்டுக்காம, 'கை மாறிய தொகை'க்கு விசுவாசமா வழக்கு பதிவு செய்யாம, லாரிய விட்டுட்டாங்க.உடுமலையில நடக்கும் சம்பவமெல்லாம், எஸ்.பி., கவனத்துக்கு போறதே இல்லை. அந்தளவுக்கு, தனிப்பிரிவும், 'தனி ரகமா' இருக்காங்க.


திருடன பிடிச்சு கொடுக்கணுமா'சத்திய' பிரமாணம் என்னாச்சுஉடுமலை போலீஸ்காரங்க, புகார் கொடுக்க வர்றவங்க எப்படியெல்லாம் விசாரிக்கறாங்க தெரியுமா, என, மொபைல்போனில் நண்பர் பேச்சை துவங்கினார்.உடுமலை, பழைய பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல, காரு கண்ணாடிய உடைச்சு, 'லேப்டாப்', பணத்துடன் கூடிய பேக் உள்ளிட்ட பொருட்களை திருடிட்டாங்க.போலீசில் புகார் கொடுக்க சென்றவரிடம், புகாரை பெற மறுத்த குற்றப்பிரிவு போலீஸ்காரங்க, அங்க இருக்கற 'சிசிடிவி' கேமரா பதிவை எடுத்துட்டு வாங்கனு சொல்லியிருக்காங்க. அப்பறம், அந்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் சுற்றி வந்துள்ளனரா, என விசாரிச்சிருக்காங்க.


கடைசி வரைக்கும், புகார வாங்காம அடுக்கடுக்கான கேள்வி கேட்டு அலைகழிச்சிருக்காங்க. 'விட்டா, திருடனை பிடிச்சு கொண்டு வாங்கனு' சொல்லிருவாங்க போலிருக்கு. கடமை தவறமாட்டோம்னு, 'சத்தியம்' செய்து பதவியேற்ற போலீசாருக்கே வெளிச்சம்.'புரோக்கர்'களான உதவி வேளாண் அலுவலர்கள்ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நண்பரை சந்தித்தேன். அவர் சொன்ன தகவல் புதுசா இருந்துச்சு.


வேளாண் துறை பெரிய ஊழல், லஞ்சம் இல்லாத துறை அப்படிங்கிற 'இமேஜ்' முழுக்க உடைஞ்சு போச்சு.அதாவது, வேளாண் நிலத்தை வீட்டு மனையா மாத்த சில 'பார்மாலிட்டிஸ்' இருக்கு. பல ஆண்டுகளா அங்க விவசாயமே நடக்கல அப்படின்னு சான்று வாங்கி கொடுக்கறது முக்கியமானது.அந்த சான்றை, அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர் தான் தரணும். இங்க தான் லஞ்சம் புகுந்து விளையாடுது. ஒவ்வொரு 'பிளாக்'லயும் ஒரு உதவி வேளாண் அலுவலர் வி.ஏ.ஓ.,க்கள் கூட நெருக்கமா இருக்கறாங்க.


அவங்க மூலமா, விவசாய நிலத்தை 'பிளாட்' போட்டு விற்கும் ரியல் எஸ்டேட் பார்ட்டிங்கள பிடிக்கறாங்க.அப்புறம், கையெழுத்துக்கு இவ்வளவு, ஏக்கருக்கு இவ்வளவு, இடத்தோட 'வேல்யூ'வை பொறுத்து இவ்வளவு அப்படின்னு பல 'ஸ்லாப்'களில் உதவி வேளாண் இயக்குனர்களுக்கு காசை வாங்கி கொடுத்திட்டு, கணிசமா கமிஷன் வாங்கிக்கறாங்க.இதையே முழு நேர தொழிலா செய்யறதால, விவசாயிங்களை சந்திக்கிறதே இல்லை. அவங்களால பணம் கொட்டுவதால் அதிகாரிங்களும் கண்டுகிறதில்ல. மாவட்ட முழுக்க வேளாண் துறையில, அவங்க ராஜ்ஜியம் தான் நடக்குனு, சொன்னார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X