பொள்ளாச்சி;'ஆதியூரில் மழைக்காலத்தில் மழைநீர் தேங்காமல் செல்ல பாலத்தை அகலப்படுத்த வேண்டும்,' என குறைதீர் நாள் கூட்டத்தில் மனு கொடுக்கப்பட்டது.பொள்ளாச்சி சப்- கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. வருவாய் கோட்டாட்சியர் ரவிக் குமார் தலைமை வகித்தார்.
தீர்வு தேவை
பொள்ளாச்சி அண்ணா காலனி, இந்திராநகர் வடக்கு பகுதி மக்கள் கொடுத்த மனு:நகராட்சி, ஏழாவது வார்டுக்கு உட்பட்ட இந்திரா நகர் சர்ச்சுக்கு வடக்கு பகுதியில் உள்ள அண்ணா காலனியில், கடந்த, 17ம் தேதி பெரும் மழை பெய்தது. நீர் போகும் வழியில் தனியார் ஒருவர் சுற்றுச்சுவர் கட்டியதால் நீர் செல்ல வழியில்லாமல் தேங்கியது.இந்நிலையில், நேற்றுமுன்தினம் மழை பெய்ததால் குடியிருப்பு பகுதிக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனையடுத்து, வருவாய்துறை அதிகாரிகள் சுவரை இடித்து வெள்ள நீர் செல்ல நடவடிக்கை எடுத்தனர். மழை வெள்ளம் புகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.
பாலம் விரிவடையுமா?
பொள்ளாச்சி, ஆதியூர் பொதுமக்கள் கொடுத்த மனு:பொள்ளாச்சி ஆதியூரில், 1,500 மக்கள் வசிக்கின்றனர். விநாயகர் கோவில் முன், சின்ன ராமர் கோவில் அருகில், நெடுஞ்சாலைத்துறை சிறிய பாலம் உள்ளது.மழைக்காலங்களில் ரோட்டின் இருபுறமும் தண்ணீர் பாலத்தை கடந்து செல்ல வேண்டும். பாலம் சிறியதாக உள்ளதால், தண்ணீர் முழுமையாக செல்ல முடியாமல், ஊருக்குள் திரும்பிவிடுகிறது.
அங்கன்வாடி மையத்துக்குள்ளும் புகுந்து விடுவதால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, 10 அடி அகலத்துக்கு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.குழியால் விபத்துஆனைமலை பொதுமக்கள் கொடுத்த மனுவில், 'தென்சித்துார் கிராமத்தில் தார் சாலை அமைக்கும் போது, ரோட்டின் இருபுறமும் இருந்த மண் அகற்றப்பட்டது. ஆனால், சாலை அமைத்து ஒரு மாதமாகியும் இருபுறமும் பள்ளம் மூடவில்லை. இதனால், இவ்வழியாக பஸ் இயங்குவதில்லை.
வாகன ஓட்டுனர்களும் விபத்துக்குள்ளாகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்,' என, வலியுறுத்தியுள்ளனர்.சுகாதாரம் இல்லைதாமரைக்குளம் மக்கள் கொடுத்த மனுவில், 'தாமரைக்குளம் பகுதியில் மாட்டுத்தோல் சுத்தம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். கேரளாவில் இருந்து கழிவுகளை எடுத்து வந்து அதை பதப்படுத்தி காய வைக்கின்றனர். இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது,' என, தெரிவித்துள்ளனர்.