பெண்ணாடம்: மாவட்ட கால்நடை துறை சார்பில், திருமலை அகரத்தில், சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நேற்று நடந்தது.உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பெண்ணாடம் கால்நடை மருத்துவமனை மருத்துவர் வேங்கடலட்சுமி தலைமையிலான மருத்துவ குழுவினர் 400க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். கால்நடை ஆய்வாளர் பொன்வேலன், ஓய்வு பெற்ற கால்நடை உதவியாளர் செல்வராஜ் உடனிருந்தனர்.இதேபோல், திருமலை அகரம் மேற்கு, பெ.கொல்லத்தங்குறிச்சி, கொத்தட்டை கிராமங்களில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. தொடர்ந்து, கால்நடை பாதுகாப்பு திட்டத்திற்கு பயனாளிகள் சேர்க்கை நடந்தது.