பின்னலுார் சூடாமணி ஏரியில் பாதியில் நிற்கும் மதகு கட்டுமான பணி | கடலூர் செய்திகள் | Dinamalar
பின்னலுார் சூடாமணி ஏரியில் பாதியில் நிற்கும் மதகு கட்டுமான பணி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2019
00:26

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த பின்னலுார் சூடாமணி ஏரியை, பெயரளவில் துார்வாரப்பட்டுள்ளது. தண்ணீர் வெளியேறும் மதகு கட்டுமான பணி பாதியில் நிற்கிறது.விருத்தாசலம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள பின்னலுார் சூடாமணி ஏரியில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, ரூ. 90 லட்சம் செலவில் துார்வாரும் பணி நடந்தது.ஏரியை அளவீடு செய்து, துார் வாராமல் பெயரளவில் கரையோரங்களில் மட்டும் துார்வாரி சென்றனர்.ஏரியின் கீழ்கரையில், வெள்ள நீர் வடிந்து செல்லும் அளவில் ஷட்டருடன் கூடிய மதகு கட்டும் பணி நடந்தது. ஏரியின் தென்பகுதி முகப்பில் நடந்த மதகை, தண்ணீர் வடிந்து செல்லும் வகையில் நடுவில் அமைக்காமல், கரையோரத்தில் அமைத்துள்ளனர்.இதனால் வெள்ள காலங்களில், ஏரியிலிருந்து தண்ணீர் வடிந்து செல்ல முடியாமல், எதிர்த்து நின்று விளை நிலங்களில் புகும் அபாயம் உள்ளது.மேலும், கட்டுமான பணியினை, கடந்த 2 மாதங்களுக்கு முன், பாதியிலேயே ஒப்பந்ததாரர் விட்டு சென்று விட்டனர். ஏரியை சரியாக துார்வாராமல் விட்டுள்ளதால், தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து விவசாயிகள், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆய்விற்காக வந்த வேளாண்துறை ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் மனு கொடுத்தனர்.பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்து, மதகு கட்டுமான பணியினை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X