கடலுார்: சுடுகாட்டு பாதை மற்றும் சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, நேற்று, கடலுாரில் பாடையை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.ராமாபுரம் வடக்கு ஆதிதிராவிடர் மக்களின் சுடுகாட்டு பாதை மற்றும் சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றக்கோரியும், ஏரியை ஆழப்படுத்தும் பணியின்போது மண் திருடியவர்களை கைது செய்ய கோரியும், ராமாபுரம் வடக்கு ஊர் பொதுமக்கள் சார்பில், அம்பேத்கர் சிலை அருகில், இருந்து பாடை ஊர்வலம் துவங்கியது.கலெக்டர் அலுவலகத்தில் பிரேதம் (பொம்பை) புதைப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். அம்பேத்கர் சிலை அருகே பாடை ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். அதைத்தொடர்ந்து தாசில்தார் தொலைபேசி மூலமாக கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கிராம மக்கள் உடன்படாத காரணத்தினால், பாடையை அங்கேயே வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.