பண்ருட்டி: பண்ருட்டி மேலப்பாளையம் ஜான்டூயி மழலையர் மற்றும் தொடக்க பள்ளியில்,மழலையர் ஒலிம்பிக் 2019 விளையாட்டு விழா நேற்று நடந்தது.உடற்கல்வி ஆசிரியர்கள் சுனிதா, வினோதினி, பழனி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். துவக்க விழாவில் ஒட்டகம் மற்றும் குதிரைகளில் மழலையர்கள் ஒலிம்பிக் மற்றும் பள்ளி கொடிகளோடு ஊர்வலமாக வந்தனர். மாணவர்கள் அணிவகுப்பு, கூட்டு உடற்பயிற்சி, கபடி, கிரிக்கெட், கால்பந்து, கூடைப் பந்து, தடையோட்டம், தொடரோட்டம், மிதிவண்டி ஓட்டம் ஆகியவை நடந்தது.போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி தாளாளர் வீரதாஸ், முதல்வர் வாலண்டினா லெஸ்லி பரிசு வழங்கினர்.