இழப்பீடு வழங்காத அரசு பஸ் ஜப்தி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
00:36

கடலுார்: விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காத அரசு பஸ்சை, கோர்ட் ஊழியர்கள் நேற்று ஜப்தி செய்தனர்.சிதம்பரம் அடுத்த புது பூலாமேடு கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்,22: இவர் கடந்த 19.07.2012 ம் தேதி பைக்கில் சிதம்பரம் அருகே உள்ள நாஞ்சலுார்- வக்காரமாரி சாலையில் வந்து கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிவக்குமார். சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இறந்தார். விபத்தில் இறந்த சிவக்குமாரின் தந்தை ராமதாஸ், தாயார் பத்மா ஆகியோர் இழப்பீடு கேட்டு கடலுார் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வழக்கறிஞர் ராம ராதாகிருஷ்ணன் ஆஜரானார். வழக்கை விசாரணை செய்த நீதிபதி, இறந்தவரின் பெற்றோருக்கு அரசு போக்குவரத்து கழகம் 14 லட்சத்து 800 ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.இழப்பீடு தொகை வழங்காத காரணத்தால், வட்டியுடன் 20 லட்சத்து 54 ஆயிரத்து 677 ரூபாய் வழங்க, மனுதார் தரப்பில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதன் பேரில் இழப்பீடு வழங்காத அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். கோர்ட் ஊழியர்கள் கடலுார் பஸ் நிலையத்தில் நின்றிருந்த அரசு பஸ்சை நேற்று ஜப்தி செய்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X