| மழையில் படுமோசமான சாலை குடியிருப்பு வாசிகள் கடும் அவதி Dinamalar
மழையில் படுமோசமான சாலை குடியிருப்பு வாசிகள் கடும் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2019
00:51

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பாரதி நகர் பகுதியில் மழையில், படுமோசமான மண் சாலையால் குடியிருப்பு வாசிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட 11வது வார்டு பாரதி நகர் காளி கோவிலுக்கு அருகே 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பாரதி நகரில் உள்ள காளி கோவிலுக்குச் செல்லும் மண் சாலை, மழையின் போது போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் மாறி வருகிறது.இதனால், மண் சாலையை தார் சாலையாக மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில் கடந்த சில நாட்களாக கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மண் சாலை சேரும் சகதியுமாக மாறி வாகனங்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் நடந்து கூட செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.சாலையோரம் உள்ள சிமென்ட் கால்வாய் நடைபாதையாக மாறியுள்ளது. நாள்தோறும் பள்ளி, கல்லுாரிக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குடியிருப்புகளைச் சுற்றி புதர்கள் மண்டி மழைநீர் சூழ்ந்திருப்பதால், பாம்பு போன்ற விஷ ஜந்துகளும் உலா வருகின்றன.இதனால், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, அப்பகுதி மக்கள் நலன் கருதி, மழை நீர் தேங்கி சேரும் சகதியுமாக உள்ள மண் சாலையை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X