| சென்னையில் கொலை வழக்கு மேல்மலையனுாரில் இருவர் சிக்கினர் Dinamalar
சென்னையில் கொலை வழக்கு மேல்மலையனுாரில் இருவர் சிக்கினர்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2019
00:52

செஞ்சி: சென்னையில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்ட இருவர் நேற்று மேல்மலையனுாரில் பிடிபட்டனர். பிடிபட்ட இருவரும் சென்னை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.சென்னை மயிலாப்பூர் போலீஸ் நிலைய எல்லைக்குள் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை வழக்கில், மைலாப்பூர், அம்பேத்கர் பாலம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார், 40; காந்தி நகரைச் சேர்ந்த ஏழுமலை மகன் ராஜ்குமார், 24; ஆகியோரை மயிலாப்பூர் போலீசார் தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று இவர்களின் மொபைல் போன் பயன்பாடு மேல்மலையனுார் பகுதியில் இருப்பது தெரிய வந்தது,இது குறித்து மைலாப்பூர் போலீசார் விழுப்புரம் மாவட்டம் வளத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.உடன், வளத்தி போலீசார் மேல்மலையனுார் கோவில் புறக்காவல் நிலையத்தில் காவல் பணியில் இருந்த காவலர் அய்யப்பனிடம் தகவல் தெரிவித்தனர்.அவர், திருமண மண்டம் ஒன்றின் அருகே நின்றிருந்த சிவக்குமார், ராஜ்குமார் ஆகியோரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து சென்னை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X