இருளில் மூழ்கிய ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
00:52

ராமநாதபுரம் : -மழையால் மின்தடை ஏற்பட்ட நிலையில் ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஜெனரேட்டர்கள் இருந்தும் செயல்படாததால் இரவு 12 மணி முதல் மருத்துவமனை இருளில் மூழ்கியதால் நோயாளிகள் தவித்தனர்.




ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 13 சிகிச்சை பிரிவுகள் உள்ளன. 250 கிலோவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. மின்தடை நேரங்களில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் பெறப்படுகிறது. இதற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பில் ஜெனரேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டருக்கு மாதம் 300 லி., அளவில் டீசல் வழங்கப்படுகிறது. அதே போல் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் அறைக்கு மாதம் 60 லிட்டர் டீசல் செலவில் 125 கிலோ வாட் மின்சாரம் பெறப்படுகிறது.டீசலுக்காக அதிகப்பட்சமாக மாதம் 25 ஆயிரம் ரூபாய் டீசல் வாங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் மின்சாரம் அடிக்கடி தடைபடுகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் இரவு 9:00 மணி முதல் நகர் முழுவதும் மின்சாரம் தடைபட்டது. அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் மூலம் இரவு 11:30 மணி வரை மின்சாரம் வழங்கப்பட்டது. அதன் பின் டீசல் இல்லாததால் ஜெனரேட்டரும் இயங்கவில்லை. இதனால் இரவு முழுவதும் நோயாளிகள், ஊழியர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.



மோட்டார் இயங்காததால் வார்டுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்ப்பட்டது. இரவு முழுவதும் கொசுக்கடியில் நோயாளிகள் அவதிப்பட்டனர். மருத்துவமனையில் மின்தடை தொடரும் நிலையில் இது குறித்து பல முறை சுட்டிக்காட்டியும் மருத்துவமனை நிர்வாகம் மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகிறது. அடிபட்டு வந்தவர்களுக்கு தையல் போடுவதற்கு அலைபேசி டார்ச் பயன்படுத்தப்பட்டது.



நேற்று காலை 8:00 மணிக்கு தான் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. மின்சாரம் தடைபடுவது தொடர்கதையாகி வரும் நிலையில் கர்ப்பிணிகள், குழந்தைகள், தீவிர சிகிச்சையில் உள்ளவர்களுக்கு மின் தடையால் பெரும் பிரச்னை ஏற்படுதவற்கு முன் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் மருத்துவமனைக்கு கிடைப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X