மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளில் மெத்தனம்! கலெக்டர் உத்தரவிட்டும் அதிகாரிகள் அலட்சியம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
00:55

விழுப்புரம் மாவட்டத்தில் கலெக்டர் உத்தரவிட்டும், டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளில் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தமிழகத்தில் கடந்த 17ம் தேதி துவங்கிய, வடகிழக்கு பருவமழை விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் குளம், குட்டை மற்றும் தெருக்களில் உள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.பொது இடங்களில் தேங்கும் மழைநீரால், பொது மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் ஏற்படுகிறது.


இதனால், ஆண்டுதோறும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.இதை தடுக்கும் வகையில், பருவமழை துவங்கும் முன், செப்டம்பர் மாதத்தில் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் தடுப்பு பணிகளை அலுவலர்கள் மேற்கொண்டு வந்தனர். இதில், வீடுகளில் உள்ள தேங்காய் ஓடுகள், டயர்கள், பாத்திரங்களில் தேங்கும் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டனர்.கடந்தாண்டு, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் கிராமம் மற்றும் நகர்புறங்களில் வீதி, வீதியாக சென்று டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டனர்.அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன் கலெக்டர் தலைமையில் டெங்கு தடுப்பு குறித்து அனைத்துத் துறை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.


அப்போது, விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநில அரசு மருத்துவமனைகள் மற்றும் கல்லுாரிகளில் சுகாதார ஆய்வாளர்களை ஈடுபடுத்தி நோய் ஆய்வு பணி செய்ய வேண்டும்.அதன் விபரங்கள் சம்மந்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தெரிவித்து, நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.மேலும், உள்ளாட்சி அமைப்புகள் பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் குளோரின் கலந்து விநியோகித்தல், விநியோக குழாயில் பழுது போன்றவற்றை கண்காணித்து உடனடியாக சரி செய்யவும் உத்தரவிடப் பட்டது.இதேபோன்று, பி.டி.ஓ.,க்கள் மூலம் 20 கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள், செயல் அலுவலர்கள் மூலமாக 10 களப்பணியாளர்கள், நகராட்சி வீதம் விழுப்புரத்திற்கு 60 களப்பணியாளர்கள் மற்றும் திண்டிவனத்திற்கு 60 களப்பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்.


இந்த களப்பணியாளர்கள் காய்ச்சல் பரப்பும் ஏடிஸ் வகை கொசு உற்பத்தியிடங்களை அழித்தல், அப்புறப் படுத்துதல் 'டெமிபாஸ்' மருந்திட்டு லார்வாக்களை அழித்தல் மற்றும் புகை மருந்து தெளித்தல் போன்ற பணிகளை சுகாதாரத்துறை ஊழியர்கள் தினந்தோறும் காலை 7:00 மணிக்கு முன்னதாக ஆய்வு மேற்கொண்டு கண்காணிக்க வேண்டும். அனைவருக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.ஆனால், டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் கொசு ஒழிப்பு பணிகளில் அலுவலர்கள் பெரும்பாலும், ஈடுபடவில்லை. கலெக்டர் சுப்பிரமணியன், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முழு கவனம் செலுத்தியதால், டெங்கு தடுப்பு பணியாளர்கள் அலட்சியமாக உள்ளனர்.ஏராளமான கிராமங்களில் குடிநீரில் குளோரின் கலக்கவும் இல்லை. கொசுப்புழு உற்பத்தியை தடுக்க முன்னெச்சரிக்கை பணிகளையும் மேற்கொள்ளவில்லை. இதனால், மாவட்டத்தில் ஏராளமானோர் காய்ச்சலுக்கு பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர்.


மாவட்டத்தில் தொடர் மழையால், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நாள்தோறும் 10க்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருகின்றனர். இதேபோன்று, வானுார் அருகே உள்ள ராயபுதுப்பாக்கத்தில் சேகர் மகன் குகன், 5; என்பவர் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு நேற்று இறந்தார்.எனவே, விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு பணிகளில் அலுவலர்களை துரிதப்படுத்தவும், அலட்சியமாக உள்ள அலுவலர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


-நமது நிருபர்-

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X