விழுப்புரம்: காலி மனையில் தேங்கும் கழிவுநீரால், தொற்றுநோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் பின்புறமுள்ள, கோவிந்தசாமி நகரில் ஏராளமான குடியிருப்புகளில் மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள இரண்டாவது தெருவில் உள்ள ஒரு காலி மனையில், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குட்டை போன்று தேங்கி நிற்கிறது.இதில், பன்றிகள் கிளறுவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போது பெய்வரும் மழையால், அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாய நிலை உள்ளது.எனவே, காலி மனையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.