சிங்கம்புணரி பள்ளங்குண்டு ஊரணி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
00:58

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் பள்ளங்குண்டு ஊரணியை துார்வார கடந்த மாதம் கலெக்டர் அனுப்பிய இயந்திரத்தை துாரெடுக்க விடாமல் சிலர் எதிர்ப்பு தெரிவித்து திருப்பி அனுப்பினர்.அது தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.



அதன் எதிரொலியால் துார்வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு துார்வார சென்ற இயந்திரம் மக்கள் போராட்டத்தின் காரணமாக மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது.பணிகள் தொடங்கும் முன்பே திருப்புத்துார் வட்டார வேளாண்மை பொறியியல் பணி கூட்டுறவு மைய தலைவர் முருகேசன் சிங்கம்புணரி தாசில்தாரிடம் இந்த இடம் எங்களுடைய வேளாண்மை பொறியியல் பணி கூட்டுறவு மையத்திற்கு சொந்தமானது. மீதமுள்ள இடம் ஒரு சமுதாயத்திற்கு பொது பயன்பாட்டிற்காக பேரூராட்சி சார்பாக இடம் வழங்கப்பட்டது.



எனவே இதில் கண்மாய் துார்வாரும் பணி செய்யக் கூடாது என வாக்குவாதம் செய்தார். அப்போது தாசில்தார் சிங்கம்புணரி கிராம கணக்குகளில் பள்ளங்குண்டு ஊரணி என்று மட்டுமே பதிவாகி உள்ளது இதில் அக்ரோ சர்வீஸ்க்கு என இடம் ஒதுக்கப்படவில்லை. மேலும் நீங்கள் கூறுவது போல பொறியியல் பணி மையத்தை தவிர்த்து மீதி உள்ள இடத்தை தரை வாடகை என்ற பெயரில் கொடுத்துள்ளனர். இது சட்டத்திற்கு புறம்பான ஒன்றாகும். ஆகவே கலெக்டர் உத்தரவுப்படி கண்மாய் பகுதியை குடிமராமத்து செய்யும் பணியை தடுக்க உங்களுக்கு உரிமை கிடையாது என க்கூறி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.



அப்பகுதி மக்களும் இந்த பகுதியில் உள்ள கடைகள் முழுவதையும் அகற்றிய பின்பே எங்கள் பகுதிக்கு அனுமதிப்போம் என்று கூறினர். இதனால் மற்ற காலி இடங்களை துார்வாரும் பணி நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு கடைகள் மற்றும் ஊரணியின் மொத்தப் பகுதியும் அளவிடும் பணி முடிந்தது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு பகுதியில் பணி முடிவடைந்து மற்றப்பகுதிக்கு செல்லும்போது ஒரு சமுகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.



இதனால் இயந்திம் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி சிங்கம்புணரி தாசில்தார் பஞ்சவர்ணம், பயிற்சி கலெக்டர் முருகேசன் முன்னிலையில் மீண்டும் பணி துவக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு கட்டடங்கள் தவிர்த்து மீதமுள்ள காலி இடங்களில் துார்வாரும் பணி நடைபெற்று வருகிறது.

 

Advertisement
மேலும் சிவகங்கை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X