மயிலம்: செ.கொத்தமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு, தலைமையாசிரியர் தண்டபாணி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் செந்தில் குமார் வரவேற்றார். தலைமையாசிரியர் தண்டபாணி மாணவர்களுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி அட்டையை வழங்கினார். வரும் மார்ச் மாதம் அரசு தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.கூட்டத்தில் கோவிந்தன், அம்புரோஸ், அர்ச்சனா, குமரவேல் உட்பட பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஜெயராமன் நன்றி கூறினார்.