| தூய இருதய பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் Dinamalar
தூய இருதய பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2019
00:59

விழுப்புரம்: ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பு சார்பில், விழுப்புரம் துாய இருதய ஆங்கிலோ இண்டியன் மேல்நிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.பள்ளி முதல்வர் மேரிமங்கலம் தலைமை தாங்கினார். ஜே.ஆர்.சி., மாவட்ட கண்வீனர் பாபு செல்வதுரை முகாமை துவக்கி வைத்தார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் ரமணன், மேற்பார்வையாளர் வில்லியம் ஆரோக்கியராஜ், உதவியாளர் சுந்தரமூர்த்தி, ஜே.ஆர்.சி., ஆலோசகர் பிலிப்ஜான் ஆகியோர் டெங்கு விழிப்புணர்வு பற்றி மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினர்.முடிவில், டெங்கு விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X