| மது அருந்தும் கூடாரமானது தியாகதுருகம் மலை Dinamalar
மது அருந்தும் கூடாரமானது தியாகதுருகம் மலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2019
01:00

தியாகதுருகம்: தியாகதுருகம் நகரைெயாட்டி, வரலாற்று சிறப்புமிக்க மலை உள்ளது. இதன் மீது திப்புசுல்தான் காலத்திய கோட்டை மற்றும் 3 பீரங்கிகள் உள்ளது. இது வரலாற்று நினைவுச் சின்னமாக தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது.மலையின் மேற்கு பகுதியில் பகவதி மலையம்மன் கோயில் உள்ளது. அடிவாரத்தில் பெரிய பாறை இடுக்குகள் காணப்படுகிறது. இது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. குறிப்பாக மது அருந்துபவர்களின் புகலிடமாக இது செயல்படுகிறது.இங்குள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கும் சிலர் மலையடிவாரத்தில் உள்ள பாறையில் அமர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். போதை தலைக்கேறி மது பாட்டிலை உடைப்பதும் அவர்களுக்குள் தகராறு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னம் அழிவின் விளிம்பில் உள்ளது. போலீசாரின் போதிய கண்காணிப்பு இப்பகுதியில் இல்லாததால் மலையடிவாரம் திறந்தவெளி 'பார்' போல செயல்படுகிறது. வார சந்தை நடைபெறும் சனிக்கிழமையில் மலையடிவாரம் நெடுகிலும் குழுவாக அமர்ந்து மது அருந்துவது அதிகரித்து வருகிறது. இதனால் மலையம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.தியாகதுருகம் நகரின் அடையாளமாக விளங்கும் வரலாற்று சிறப்புமிக்க மலை, சீரழிந்து வருவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தியாகதுருகம் மலையை சுற்றிலும் போலீசார் கண்காணித்து சமூக விரோத செயலில் ஈடுபடுேவார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X