கோவை:வடகிழக்கு பருவமழை சீசன் துவங்கியுள்ளதை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் பேரிடர் மேலாண்மைப் பிரிவில், 24 மணி நேரமும், ஊழியர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. அக்.,1 முதல் நேற்று வரை, 175 மி.மீ., மழை மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இது, இந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்யும் மழையான 96 மி.மீ.,ஐ காட்டிலும், 82 சதவீதம் அதிகம்.கோவை மாவட்டத்தில் இன்றும், ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும், பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம்:அன்னுார் 5 மி.மீ., மேட்டுப்பாளையம் 36.4, சின்கோனா 21, சின்ன கல்லார் 16, வால்பாறை பி.ஏ.பி., 8, வால்பாறை தாலுகா அலுவலகம் 7, சோலையாறு 9, கோவை தெற்கு தாலுகா அலுவலகம் 2, பெரியநாயக்கன்பாளையம் 6, வேளாண் பல்கலை 0.6 மி.மீ.,கனமழை பெய்வதை முன்னிட்டு, மாவட்ட பேரிடர் மேலாண்மை மையத்தில், 24 மணி நேரமும் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களும், முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.