ஓட்டுனர் உரிமம் வழங்கும் பணி துவங்கியது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
01:09

திண்டுக்கல் : நாடு முழுவதும் ஒரே மாதிரியாக வழங்குவற்காக மத்திய அரசால் ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஓட்டுனர் உரிமம் வழங்கும் பணி, நேற்று மீண்டும் துவங்கியது.



வாகனங்கள் ஓட்டுவதற்கான உரிமம், அதில் இடம் பெறும் விவரங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். குறிப்பாக ஒரு மாநிலத்தை சேர்ந்தவர், வேறு மாநிலத்திற்கு இடம் பெயரும் போது அல்லது அங்கு தங்கும் போது ஓட்டுநர் உரிமத்தை மாற்றுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. அதனால் நாடு முழுவதும் ஒரே மாதியான ஓட்டுநர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவ்வாறு வழங்கும் போது அதன் வடிவம், அதில் இடம்பெறும் விவரங்கள் ஒரே மாதிரியாக இருக்கும். இதனால் வேறு மாநிலம் சென்றாலும் சிக்கல் வராது.



உரிமம் நிறுத்தம்இதற்காக பிரத்யேக மென்பொருள் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் உரிமம் வழங்கப்படும் என 2019 அக்.1 ல் மத்திய அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் மத்திய, மாநில அரசுகளின் முறையான அறிவிப்பை எதிர்பார்த்து, விண்ணப்பித்தவர்களுக்கு புதிதாக ஓட்டுனர் உரிமம் வழங்காமல் நிறுத்தி வைத்தனர்.இதனால் திண்டுக்கல் மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.



இருசக்கர வாகன ஓட்டிகள், போக்குவரத்து போலீசாரிடம் அகப்பட்டு விடுவோமோ என தவித்து வந்தனர். மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வராததால் நேற்று முன்தினம் முதல் வழக்கம் போல் ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பிக்கலாம்வாகன ஆய்வாளர் விஜயகுமார் கூறுகையில், 'நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஓட்டுனர் வழங்கும் திட்டத்திற்காக புதிய ஓட்டுனர் உரிமம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து எந்த அறிவிப்பும் வராததால் கடந்த வாரம் முதல் வழக்கம் போல் வழங்கப்படுகிறது.



ஒரு மாதமாக காத்திருந்தோருக்கு 2 நாட்களுக்குள் வழங்கப்படும். புதிதாக விண்ணப்பிப்போர் வழக்கம் போல் விண்ணப்பிக்கலாம்' என்றார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X