கோவை:அவிநாசி ரோடு, பன்மாலில் குட்டீஸ் பங்கேற்ற பேஷன் ஷோ நிகழ்ச்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.பேஷன் நிறுவனம் சார்பில், குழந்தைகளுக்கான 'பேஷன் ஆர்ட் பெஸ்ட்-2019' என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி நடந்தது. பேஷன் டிசைனிங் பயின்றும் வரும் பெண்களால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை, அவர்களது குழந்தைகள் அணிந்து வந்து பங்கேற்றனர். மொத்தம், 72 குட்டீஸ், விதம் விதமான ஆடைகள் அணிந்து, ஒய்யாரமாக நடந்து வந்த காட்சி, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பேஷன் நிறுவன நிறுவனர் சுகுணா கூறுகையில், ''முதலாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, எங்களிடம் பயிலும் இல்லத்தரசிகளை, அங்கீகரிக்கும் விதமாக இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். பங்கேற்ற அனைத்து,குழந்தைகளுக்கும் மெடல் மற்றும் கோப்பைகள் வழங்கப்படும்,'' என்றார்.