குழந்தை பெற்றாலும் அழகை காக்கலாம்! கூறுகிறார் 'இந்தியா யுனிவர்ஸ் எர்த்' பட்டம் பெற்ற சோனாலி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
01:26

கோவை:கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த, 38 வயது பெண் சோனாலி பிரதீப். 'மிஸஸ் இந்தியா யுனிவர்ஸ் எர்த்' எனும் பெயரில், மொரிஷியசில் நடந்த அழகிப்போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்றார்.வெற்றி பெற்ற கையோடு, கோவை விமான நிலையத்தில் வந்திறங்கிய அவருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


அப்போது அவர் கூறியதாவது:மொரிஷியஸ் தீவில், திருமணமான பெண்களுக்கான சர்வதேச அழகி போட்டி நடந்தது. 40 நாடுகளிலிருந்து பலர் பங்கேற்றனர். பல்வேறு கட்ட தேர்வுக்குப்பின், இறுதி போட்டியில் பங்கேற்றேன். இதில், 'மிஸஸ் இந்தியா யுனிவர்ஸ் எர்த்' பட்டத்தை வென்றுள்ளேன்.


இறுதி சுற்றில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, 'ஒவ்வொரு பெண் குழந்தையும் கல்வி பெற வேண்டும்; குறிப்பாக, மலைவாழ் குழந்தைகளுக்கு, கல்வி பெற்று தருவதில் பாடுபடுவேன்' என கூறியுள்ளேன்.ஏற்கனவே நான் மலைவாழ் மக்களின், குழந்தைகளின் கல்விக்காக பாடுபட்டு வருகிறேன்; இனியும் பாடுபடுவேன்.2015ல், முதல் முறையாக கோவையில் நடந்த போட்டியில், பங்கேற்று வெற்றி பெற்றேன். இதையடுத்து, பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற பின், தற்போது 'மிஸஸ் யுனிவர்ஸ்' பட்டத்தை வென்றுள்ளேன். அடுத்து, 2020ல் நடக்கும் உலக அழகி போட்டியிலும், பங்கேற்க உள்ளேன்.அழகி போட்டியில் பங்கேற்க, என்னை ஊக்குவித்தது எனது கணவர் தான். நான் வடமாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும், கோவை தான் எனது சொந்த ஊர். அழகிய கோவை நகருக்கு, இந்த விருதை அர்ப்பணிக்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.


குழந்தை பெற்றவுடன் பெரும்பாலான, பெண்கள் தங்களது அழகில் கவனம் செலுத்துவதில்லை. உடல் எடையிலும் கவனம் செலுத்துவதில்லை. இது கூடாது. தொடர்ந்து தங்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதிலும், மனதையும் மகிழ்வாக வைத்துக் கொள்வதிலும், கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கை அழகானது.- சோனாலி பிரதீப்மிஸஸ் இந்தியா யுனிவர்ஸ் எர்த்

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X