ஆளை விழுங்க காத்திருக்கிறது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
01:27

அதிக மக்கள் நடமாட்டம் மிகுந்த கிராஸ்கட் ரோட்டில்தான் இந்த அவலம்

கிராஸ்கட் ரோட்டில் திறந்த சாக்கடைகிராஸ்கட் ரோடு, எட்டாவது வீதியில் சுத்தம் செய்த பின்பு, சாக்கடை கால்வாய்க்கு மூடி போடாமல், திறந்தநிலையில் விடப்பட்டுள்ளது.- மனோகரன், காந்திபுரம்.

தண்ணீர்பந்தலில் மின்மாற்றி சேதம்பீளமேடு, தண்ணீர்பந்தல் ரோட்டில் மின்மாற்றியின் கான்கிரீட் துாண்கள் விரிசலுடன், மோசமாக சேதமடைந்துள்ளது.- சிவராஜ்குமார், பீளமேடு.

குறிச்சி சாலையில் குளம்குறிச்சி பேருந்து நிலையம் அருகே வெங்கடாச்சலபதி நகரில், சாலையில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.- குமார், குறிச்சி.

எல்.ஜி.பி., நகரில் குப்பை தேக்கம்சரவணம்பட்டி, எல்.ஜி.பி., நகர், இரண்டாவது வீதியில், கடந்த ஒரு வாரமாக குப்பை அகற்றவில்லை.- எல்.ஜி.பி., நகர் பொதுமக்கள்.

திருப்பதி நகரில் தொட்டிகளில்லைசோமையம்பாளையம், திருப்பதி நகர், சாவரா வித்யா பவன் பள்ளிக்கு அருகே, திறந்தவெளியில் குப்பை கொட்டுதை தடுக்க, தொட்டி வைக்க வேண்டும்.- அனில்குமார், திருப்பதிநகர்.

சங்கனுார் சாலையில் அதிக விபத்துகாமராஜபுரம், சங்கனுார் மெயின் ரோட்டில் குழிகள் நிறைந்த சாலையில் அதிக விபத்து ஏற்படுகிறது.- பிரபு, காமராஜபுரம்.

சேறும், சகதியுமாய் கிருஷ்ணா நகர்பொன்னையராஜபுரம், கிருஷ்ணா நகர், கோவிந்தசாமி லேஅவுட் பகுதியில் மண்சாலையில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக உள்ளது.- கிருஷ்ணா, பொன்னையராஜபுரம்.

ஸ்ரீபதி நகரில் மலைபோல் குப்பைராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் ரோடு, ஸ்ரீபதி நகரின் பிரதான சாலையில், மலைபோல் குப்பை குவிந்துள்ளது.- பிரபாகரன், ராமநாதபுரம்.

பொதுக்கழிப்பிடத்தில் அதிக கட்டணம்அவிநாசி ரோடு, உப்பிலிபாளையம், ஜே.எம்.பேக்கரி அருகில் அமைந்துள்ள, மாநகராட்சி பொதுக்கழிப்பிடத்தில், அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.- விஜயன், உடையாம்பாளையம்.

சோலார் விளக்கு 'மக்கர்'வடவள்ளி - தொண்டாமுத்துார் ரோடு, வெற்றி அபார்ட்மென்டில் உள்ள சோலார் விளக்குகள், கடந்த ஆறு மாதங்களாக எரியவில்லை.- வேலுச்சாமி, வடவள்ளி.

பீளமேட்டில் இடிந்த கால்வாய்பீளமேடு, காமராஜர் ரோடு, ஆர்.எச்.ஆர்., ஓட்டல் எதிரில் சாலையில் சேதமடைந்துள்ள சாக்கடை கால்வாயை, சீர்செய்ய வேண்டும்.- ராஜ்புரோகித், பீளமேடு.

குமரன் நகரில் மின்விபத்து அபாயம்கணபதி, 47வது வார்டு, குமரன் நகரில், மின்கம்பிகளில் உரசும் மரக்கிளைகளால் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது.- சங்கர், கணபதி.

தார்சாலை வேண்டும்வெள்ளக்கிணறு, ராகவேந்திரா கார்டனில் மண்சாலையை மாற்றி தார்சாலை அமைத்து தரவேண்டும்.- விஜயகோபால், வெள்ளக்கிணறு.

தலையில் விழுமா மின்கம்பம்பேரூர், சுண்டப்பாளையம், 19வது வார்டு, கிழக்கு ரத வீதியில், மோசமான நிலையிலுள்ள மின்கம்பத்தை, உடனடியாக மாற்ற வேண்டும்.- சத்யா,

சுண்டப்பாளையம்.

தவசி நகரில் சாலை ஆக்கிரமிப்புதடாகம் ரோடு, கோவில்மேடு, தவசி நகரில் சாலையை ஆக்கிரமித்து ஓட்டல் அமைக்கப்பட்டுள்ளது.- ஆனந்த், கோவில்மேடு.

சேரன்மாநகரில் மழைநீர் தேக்கம்சேரன்மாநகரில் குடிநீர் குழாய் பதிப்பு பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகளில், மழைநீர் தேங்கி நிற்கிறது.- பிரவின் தேவ், சேரன்மாநகர்.

காத்திருக்கும் மரக்கழிவுலட்சுமி மில்ஸ் சந்திப்பு, டி.பி.எப்., வீதியில், கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக, சாலையில் குவிக்கப்பட்ட மரக்கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளன.- கார்த்திக்,

டி.பி.எப்., வீதி.

புதுப்பாளையத்தில் பராமரிப்பற்ற தொட்டிதொண்டாமுத்துார், புதுப்பாளையம், ரேஷன் கடை அருகில் குப்பைத் தொட்டி சேதமடைந்து, பராமரிப்பின்றி காணப்படுகிறது.- வாசுதேவன், வடவள்ளி.

கட்டபொம்மன் வீதியில் பள்ளம்கட்டபொம்மன் வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலையின் இருபுறமும், பள்ளமாக காணப்படுகிறது.- இஜாஸ், கணபதி.

வடிகால் வசதியில்லைரத்தினபுரி, 45வது வார்டு, ரயில்வே மேம்பாலத்தின் கீழ் மழைநீர் தேங்குவதை தடுக்க, வடிகால் வசதி அமைக்க வேண்டும்.- ராஜசேகர், ரத்தினபுரி.

துார்வாராத சாக்கடைபீளமேடு, 37வது வார்டு, ஸ்ரீ லட்சுமி நகர் மற்றும் ஜெய்நகர் பகுதியில் பல மாதங்களாக, சாக்கடை கால்வாய் துார்வாரப்படாமல் உள்ளது.- ராஜசேகர், பீளமேடு.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X