| கண்டன ஆர்ப்பாட்டம்: நலச்சங்கம் முடிவு Dinamalar
கண்டன ஆர்ப்பாட்டம்: நலச்சங்கம் முடிவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2019
01:28

புதுச்சேரி: பல்கலைக்கழகத்திற்கு நிலம் வழங்கியோருக்கு ஒப்பந்தப்படி வேலை வாய்ப்பு வழங்காததை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி பல்கலைக்கழகம் நிலம் இழந்தோர் நலச்சங்கத்தின் செயற்குழு கூட்டம், சின்ன காலாப்பட்டு நாகவள்ளி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்தது.சங்கத் தலைவர்கள் முத்துகிருஷ்ணன், சாந்தமூர்த்தி தலைமை தாங்கினர். பொதுச் செயலாளர் பெருமாள், பொருளாளர் ஜெயபால், இணை செயலாளர் பாலசுப்பரமணியன், சங்க ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் பெருமாள் நன்றி கூறினார்.கூட்டத்தில், புதுச்சேரி பல்கலைக் கழகத்திற்கு நிலம் கையகப்படுத்தும் போது, நிலம் கொடுத்த குடும்பத்தில் ஒருவர் வீதம் வேலை வழங்க வேண்டும் என ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி 60 சதவீத குடும்பத்தினருக்கு வேலை கொடுத்து, அவர்கள் ஓய்வு பெற்றுவிட்டனர். 40 சதவீத குடும்பத்தினருக்கு இதுவரை வேலை வாய்ப்பு வழங்காமல் பல்வேறு காரணங்களை கூறி நிர்வாகம் தாமதம் செய்து வருகிறது. இதனை கண்டித்து, வரும் நவம்பர் மாதம் முதல்வாரத்தில், பல்கலைக்கழகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X