குறிச்சி அரசு பள்ளியில் படிக்க நீச்சல் கத்துக்கணும்! நீர் தேக்கத்தால் டெங்கு அபாயம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
01:29

கோவை:குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், அதிகளவு மழைநீர் தேங்கியுள்ளதால், மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், 185 மாணவர்கள் படிக்கின்றனர். கிட்டத்தட்ட 3.7 ஏக்கர் பரப்பளவு கொண்ட இப்பள்ளி வளாகத்தில், மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது. மாணவர்கள் வகுப்பறைக்கு, செல்லவே இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.


நேற்று விடுமுறை அறிவித்ததால், எந்த சிக்கலும் இல்லை.இன்று பள்ளி செயல்படவுள்ள நிலையில், மாணவர்கள் உள்ளே நுழையவே முடியாத அளவுக்கு, தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது.இப்படி நாள்கணக்கில் தண்ணீர் வெளியேறாமல் தேங்கியிருந்தால், கொசு பெருகி டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களால், குழந்தைகள் பாதிக்கப்படுவர். இதுபோன்ற அரசுப்பள்ளிகளில், பாதுகாப்பு முன்னேற்பாடுகளை, கல்வி அதிகாரிகள் செய்ய வேண்டும்.பள்ளி தலைமையாசிரியை சாந்தி கூறுகையில், ''பள்ளிக்கு அருகேயுள்ள தோட்ட பகுதிகளில் இருந்து தண்ணீர், மைதானத்துக்கு வருகிறது. தேங்கியிருக்கும் மழைநீர் வெளியேற்ற, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,'' என்றார்.


பேரூர் கல்வி மாவட்ட அலுவலர் சுப்புலட்சுமி கூறுகையில், ''பள்ளி காம்பவுண்டு சுவரை ஒட்டியுள்ள ரோடு வழியாக, குழாய் பதித்து தான், உள்ளிருக்கும் தண்ணீரை வெளியேற்ற முடியும். இதுகுறித்து உரிய துறை அலுவலர்களுடன் பேசியுள்ளோம். நிரந்தர தீர்வுக்கு ஏற்பாடு செய்யப்படும்,'' என்றார்.கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களின் குழந்தைகள், பாதுகாப்பான பள்ளிகளில் படிக்க, ஏழை குழந்தைகளின் கல்வி கனவு நிறைவேறுவது, இது போன்ற பள்ளிகளை நம்பிதான் உள்ளது.


இவற்றின் நிலைமையும் இப்படியிருந்தால், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்படித்தான் உயரும்?கல்வி அதிகாரிகள், ஆசிரியர்களின் குழந்தைகள், பாதுகாப்பான பள்ளிகளில் படிக்க, ஏழை குழந்தைகளின் கல்வி கனவு நிறைவேறுவது, இது போன்ற பள்ளிகளை நம்பிதான் உள்ளது. இவற்றின் நிலைமையும் இப்படியிருந்தால், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்படித்தான் உயரும்?

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-அக்-201908:58:36 IST Report Abuse
ருத்ரா நீச்சல் போட்டி வைத்தால் கொசுக்கள் மெடல் வாங்கும். மழைக்காலம் வரும் முன்பே இதற்கு நீர் தேங்காமல் தடுப்பு நடவடிக்கை எடுக்க முடியாதா. நிலவேம்பு கஷாயம் தரும் இடங்களை அதிகரிக்கலாம். மருந்து அடிக்கலாம் அடிக்கடி. நீர் தேங்கும் இடத்தை சரி செய்யலாம். பொதுபணித்தறையுடன் மக்களும் சேர்ந்து. Prevention is better than cure.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
22-அக்-201908:15:01 IST Report Abuse
Bhaskaran அதை அப்படியே ஒரு ஆழ்துளை குழாய்கிணறு அமைத்து மழைநீரை சேமிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel
vasumathi - Sindhathari Pettai ,இந்தியா
22-அக்-201903:07:14 IST Report Abuse
vasumathi அங்க ஒரு நல்ல குளம் கட்டலாமே . நீச்சலும் கத்து கொடுக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X