| அன்பு நகரில் கண்காணிப்பு கேமரா எஸ்.பி., இயக்கி வைத்தார் Dinamalar
அன்பு நகரில் கண்காணிப்பு கேமரா எஸ்.பி., இயக்கி வைத்தார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2019
01:29

வில்லியனுார்: வில்லியனுார், அன்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை எஸ்.பி., இயக்கிவைத்தார்.வில்லியனுார் அருகே உள்ள ஆச்சார்யாபுரம் அன்பு நகர் மக்கள் மேம்பாட்டு நலச்சங்கம் சார்பில், நகர் முழுவதும் 19 இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது.இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு நலச்சங்கத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் பாவாடை முன்னிலை வகித்தார். பொருளாளர் திருமலை வரவேற்றார்.போலீஸ் எஸ்.பி., ரங்கநாதன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் ஆகியோர் கண்காணிப்பு கேமரவை இயக்கிவைத்து பேசினர். மங்கலம் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா வாழ்த்திப் பேசினார்.இந்நிகழ்ச்சியில் நலச்சங்க கவுரவத் தலைவர்கள் ராமதாஸ், ராமச்சந்திரன், நிர்வாகிகள் செந்தில்குமார், ராமு, ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X