| முதியோர்கள் ஓட்டு போட மாணவ, மாணவிகள் உதவி Dinamalar
முதியோர்கள் ஓட்டு போட மாணவ, மாணவிகள் உதவி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2019
01:30

புதுச்சேரி: முதியோர்களும், மாற்றுத் திறனாளிகளும் ஓட்டு போடுவதற்கு, 'ஸ்வீப்' அமைப்பின் சார்பில் மாணவ, மாணவிகள் உதவிகளை செய்தனர்.காமராஜ் நகர் தொகுதி இடைத் தேர்தல் ஓட்டுப் பதிவு நேற்று விறுவிறுப்பாக நடந்தது. மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்கள் ஓட்டு போடுவதற்கு, தேர்தல் துறையின் 'முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு அமைப்பு'(ஸ்வீப்) சார்பில் தன்னார்வலர்களை கொண்டு உதவுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.இதன் ஒரு பகுதியாக, ஆச்சார்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இந்திராகாந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள், முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை சக்கர நாற்காலிகளின் உதவியுடன் அழைத்து சென்று ஓட்டு போடுவதற்கு உதவி செய்தனர். இந்த ஏற்பாட்டை பொதுமக்களும், வாக்காளர்களும் வெகுவாக பாராட்டினர்.இந்த பணிகளை, 'ஸ்வீப்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தசாமி, நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் குழந்தைசாமி ஆகியோர் தலைமையேற்று நடத்தினர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X