| ஓட்டுச்சாவடி அருகில் அமைச்சர், என்.ஆர்., காங்., கட்சியினர் எதிர்ப்பு Dinamalar
ஓட்டுச்சாவடி அருகில் அமைச்சர், என்.ஆர்., காங்., கட்சியினர் எதிர்ப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2019
01:31

புதுச்சேரி: ரெயின்போ நகர் ஓட்டுச்சாவடி அருகே முகவர்கள் இருந்த இடத்தில் அமர்ந்திருந்த காங்., அமைச்சருக்கு, என்.ஆர்.காங்., மற்றும் கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் நேற்று நடந்தது. இத்தொகுதியில் காங்., வேட்பாளர் ஜான்குமாருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய, ரெயின்போ நகர் வார்டு தேர்தல் பணிக்குழு தலைவராக அமைச்சர் ஷாஜகான் நியமிக்கப்பட்டார். அப்பகுதியில் அவர் தேர்தல் பணியாற்றினார்.தேர்தல் நடந்த நேற்று, ரெயின்போ நகர் மூன்றாவது குறுக்கு தெருவில் அமைக்கப்பட்டிருந்த ஒட்டுச்சாவடி பகுதிக்கு வந்த அமைச்சர் ஷாஜகான், ஓட்டுச்சாவடி அருகே முகவர்களுடன் அமைச்சர் அமர்ந்திருந்தார்.தகவலறிந்த என்.ஆர்.காங்., வேட்பாளர் புவனேஸ்வரன் மற்றும் கூட்டணி கட்சியினர், சுசி கம்யூ., வேட்பாளர் லெனின்துரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, அமைச்சராக இருப்பவர் ஓட்டுச்சாவடி அருகே அமர்ந்துகொண்டு ஒட்டு சேகரிக்கிறார் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.அங்கிருந்து அவரை அனுப்பும்படி பணியில் இருந்த போலீசாரிடம்கூறினார்.இதனிடையே, என்.ஆர்.காங்., அ.தி.மு.க., பா.ஜ., கட்சியினர் அங்கு கூடியதால் பரபரப்பு நிலவியது. அதனையடுத்து அமைச்சர் ஷாஜகான் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அங்கு கூடியிருந்தவர்களை அப்புறப்படுத்தி, நிைலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X