புதுச்சேரி: கலெக்டரும், சீனியர் எஸ்.பி.,யும் புல்லட்டில் சென்று ஓட்டுச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.காமராஜ் நகர் தொகுதி இடைத் தேர்தல் ஓட்டுப் பதிவு நேற்று நடந்தது. உள்ளூர் போலீசாருடன், துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.மொத்தமுள்ள 32 ஓட்டுச்சாவடிகளில் 7 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையான அடையாளம் காணப்பட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அருணும், சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்.பி., ராகுல் அல்வாலும் ஓட்டுச்சாவடிகளுக்கு புல்லட்டில் சென்று ஓட்டுப் பதிவு நடப்பதையும், பாதுகாப்பு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.ராகுல் அல்வால் புல்லட்டை ஓட்டிச் செல்ல, கலெக்டர் அருண் பின்னால் உட்கார்ந்து சென்றதை பலர் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.