ஓட்டுப் பதிவு சரிவு அரசியல் கட்சியினர் அதிர்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
01:32

புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதி இடைத் தேர்தலில் ஓட்டுப் பதிவு குறைந்துள்ளதால், அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, இடைத் தேர்தலில் ஓட்டுப் பதிவு அதிகரிப்பது வழக்கம். பொதுத் தேர்தலின்போது, மாநிலத்தில் உள்ள அனைத்து தொகுதிகள் மீதும் அரசியல் கட்சியினரின் கவனம் இருக்கும். இதனால், ஒரு குறிப்பிட்ட ஒரு தொகுதியின் மீது கவனம் செலுத்த முடியாது.இடைத் தேர்தல் என்றால் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சியினரின் ஒட்டுமொத்த கவனமும் குறிப்பிட்ட ஒரு தொகுதியின் மீது குவிந்து விடும். இதற்கு, இடைத் தேர்தலில் வெற்றி பெறுவதை ஆளுங்கட்சியினர் கவுரவமாக நினைப்பதுதான் காரணம். இதற்காக, தங்களது ஒட்டுமொத்த பலத்தையும் காண்பிப்பது வழக்கம்.அதேசமயம், இடைத் தேர்தலில் வெற்றி பெற்று விட்டால் ஆட்சியின் அவலத்தையும், பலவீனத்தையும் வெளிச்சம்போட்டு காட்டி விடலாம் என்பது எதிர்கட்சிகளின் கணக்கு. அதனால், வெற்றிக்கனியை எப்படியாவது பறிப்பதற்கு தங்களது ஒட்டுமொத்த சக்தியையும் எதிர்கட்சியினர் செலவிடுவார்கள்.மேலும், அரசியல் கட்சியினரின் அன்பான அணுகுமுறையும் அதிகமாக இருக்கும். இதுபோன்ற காரணங்களால், இடைத் தேர்தலின்போது, அதிகளவில் ஓட்டுகள் பதிவாகும்.கட்டாயம்... நெருக்கடி...புதுச்சேரியில், கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும், தொடர்ந்து நடந்த லோக்சபா தேர்தலிலும், தட்டாஞ்சாவடி இடைத் தேர்தலிலும் காங்., - தி.மு.க., கூட்டணி வெற்றிக் கொடி நாட்டியது. காமராஜ் நகர் தொகுதி இடைத் தேர்தலிலும் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் காங்., - தி.மு.க., கூட்டணிக்கு ஏற்பட்டது.தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கும் என்.ஆர். காங்., கட்சிக்கோ, வரும் 2021ம் ஆண்டில் நடக்க உள்ள சட்டசபை பொதுத் தேர்தலுக்கு முன்னோட்டமாக காமராஜ் நகர் தொகுதி இடைத் தேர்தலில் வெற்றி பெற்றே தீர வேண்டிய நெருக்கடி எழுந்தது.இரு கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பணியில் ஈடுபட்டனர். முதல்வர் நாராயணசாமியும், எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமியும் வீடு வீடாக ஏறி இறங்கி ஓட்டு சேகரித்தனர். அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் காங்., நிர்வாகிகள் படையும் களம் இறங்கியது. என்.ஆர். காங்., கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மாநிலம் முழுவதும் இருந்து வந்து காமராஜ் நகர் தொகுதியில் முகாமிட்டு பணியாற்றினர்.சாதகமா? பாதகமா?இதுபோன்ற காரணங்களால், காமராஜ் நகர் தொகுதியில் ஓட்டுப் பதிவு சதவீதம் எகிறும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால், 69.44 சதவீத ஓட்டுகள் மட்டுமே நேற்று பதிவானது. கடந்த 2016ம் ஆண்டு நடந்த சட்டசபை பொது தேர்தலில் 77.40 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது, 7.96 சதவீதம் ஓட்டுகள் சரிந்துள்ளது.புதுச்சேரியுடன் பின்னி பிணைந்து அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் 84.36 சதவீதம் ஓட்டுகள் நேற்று பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், ஆளுங்கட்சி, எதிர்கட்சி மட்டுமல்லாமல் ஒட்டுமொத்தமாக அரசியல் கட்சியினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஓட்டுப் பதிவு சதவீதம் குறைந்தது யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம் என்பது சூடான விவாதமாக உருவெடுத்துள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X