காமராஜ் நகர் இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு 69.44 சதவீதம்! லோக்சபா தேர்தலைவிட 4.95 சதவீதம் குறைவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
01:34

புதுச்சேரி: புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் ஓட்டளிக்க வாக்காளர்கள் ஆர்வம் காட்டாததால், 69.44 சதவீத ஓட்டுகளே பதிவாகியது. இது, கடந்த லோக்சபா தேர்தலை விட 4.95 சதவீதம் குறைவு ஆகும்.



புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த வைத்திலிங்கம், லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றதால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இதனால் காலியான காமராஜ் நகர் தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது.கடந்த லோக்சபா தேர்தலில், காமராஜ் நகர் தொகுதியில் உள்ள ஒரு ஓட்டுச்சாவடியில், மாதிரி தேர்தல் நடத்தப்பட்ட ஓட்டு சீட்டுகள், அகற்றப்படாமல், குளறுபடி நடந்ததால், கடந்த மே 12ம் தேதி மறு வாக்குப்பதிவு நடந்தது. அதுபோன்ற குளறுபடிகள் தற்போது நடந்துவிடக்கூடாது என்பதில் தேர்தல் அதிகாரிகள்எச்சரிக்கையுடன் செயல்பட்டனர்.




மேலும், அமைதியான முறையில் தேர்தலை நடத்த, மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் அருண் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டார். சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருக்க மதுக்கடைகள், பிரசாரம் ஒய்ந்த 19ம் தேதி மாலை முதல் நேற்று வரையில் மூடப்பட்டது. 48 மணி நேரத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேலும், துணை ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.இதனால், காலை 7:00 மணிக்கு ஓட்டுச்பதிவு துவங்கி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. ஆண், பெண்களுக்கு தனி வரிசை, வாக்குச் சாவடிக்குள் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு சாய்வு தள வசதி, மாற்றுத்திறனாளிகளை வாக்குச் சாவடிக்குள் அழைத்துச் செல்ல சக்கர நாற்காலி, அவர்களுக்கு உதவ தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.தொகுதியில் 21 மையங்களில் உள்ள 32 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம் 35 ஆயிரத்து 9 வாக்காளர்கள் கொண்ட இந்த தொகுதியில், ஆண்கள் -17 ஆயிரத்து 47; பெண்கள்-17 ஆயிரத்து 961; மூன்றாம் பாலினத்தவர்- ஒருவர் இடம் பெற்றுள்ளனர்.காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி, மாலை 6:00 வரை நடந்தது. நேற்று முன்தினம் இரவு துவங்கி மழை நேற்றும் பெய்ததால், காலையில் இருந்தே ஓட்டுப்பதிவு மந்தமாக இருந்தது. மதியத்திற்கு பிறகே விறுவிறுப்பானது. 9:00 மணி நிலவரப்படி 9.66 சதவீதமே ஓட்டுகள் பதிவாகியது.




11:00 நிலவரப்படி 28.17 சதவீதமும், பகல் 1:00 மணி நிலவரப்படி 42.71 சதவீதமும்,3:00 மணி நிலவரப்படி 56.16 சதவீதமும், 5:00 மணி நிலவரப்படி 66.95 சதவீதமும் பதிவாகியது.மாலை 6:00 வரையுடன் ஓட்டுப்பதிவு முடிவடைந்த நிலையில், மொத்தம் 24,310 ஓட்டுகள் பதிவாகியது. இதில், 11,695 ஆண் வாக்காளர்களும், 12,61௪ பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் ஓட்டளித்திருந்தனர், ஓட்டுப்பதிவு சதவீதம் 69.44 ஆகும்.கடந்த ஏப்ரல் 18 ம் தேதி நடந்த லோக்சபா தேர்தலில், இந்த தொகுதியில் 74.39 சதவீதம் ஓட்டுகள் பதிவாகியது. தற்போது, வாக்காளர்கள் ஆர்வம் காட்டாததால், கடந்த தேர்தலைவிட 4.95 சதவீதம் ஒட்டுப்பதிவு குறைந்துள்ளது.தேர்தலையொட்டி காமராஜ் நகர் தொகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடப்பட்டிருந்தது.




மாலை 6:00 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்ததும்,லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லுாரியில் உள்ள பாதுகாப்பு அறையில் (ஸ்ட்ராங் ரூம்) ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டன. அங்கு, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதி ஓட்டு எண்ணிக்கைநடக்கிறது.


 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X