தேனி : தேனியில் ரீச் அகாடமி, ஜே.சி.ஐ., தேனி ஹனிபீ, சென்ட்ரல் ஜெம்ஸ் ரோட்டரி சங்கம் சார்பில், கம்மவார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 'நீட்', ஜே.இ.இ., இலவச மாதிரி நுழைவுத்தேர்வு நடந்தது. தேனி கல்வி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை ரீச் அகாடமி தேனி கிளை மேலாளர் ஆனந்த்பாபு, ஜே.சி.ஐ., ரோட்டரி உறுப்பினர்கள் செய்திருந்தனர். பெற்றோர்களுக்கான கலந்தாய்வு கூட்டத்தில் கல்வி குறித்த விழிப்புணர்வு, நுழைவுத் தேர்வு குறித்து மனிதவள பயிற்சியாளர் சதீஷ்குமார் விளக்கினார். நவ., 17 ல் உத்தமபாளையம் கல்வி மாவட்டத்திற்கான மாதிரி தேர்வு நடக்க உள்ளது. முன் பதிவிற்கு 97505 64000 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.