கண்களுக்கு விருந்தளிக்கும் 'மியூசிக்கல் பவுண்டேன்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2019
02:15

மதுரை : கண்களுக்கு விருந்தளிக்கும் மதுரை மாநகராட்சி ஈகோ பூங்காவில் 'மியூசிக்கல் பவுண்டேன்' மதுரை மக்களை வசீகரிப்பதில் தோல்வியடைந்துள்ளது. சொற்ப பார்வையாளர்களே வருகை தருகின்றனர்.



நவீன மியூசிக்கல் பவுண்டேன் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டது. இப்பொறுப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு ரூ.70 லட்சத்தில் பணிகள் முடிக்கப்பட்டன. பத்தாண்டு ஒப்பந்த அடிப்படையில் அந்நிறுவனமே இதை பராமரிக்கிறது. வருவாயில் 10 சதவீதத்தை மாநகராட்சிக்கு வழங்க வேண்டும். கடந்த ஆகஸ்டில் செயல்பாட்டுக்கு வந்தது. பார்வையாளர்களை கவரும் வகையில் பல வண்ண லேசர் விளக்குகளில் இருந்து பாயும் ஒளி பொங்கி எழும் செயற்கை நீரூற்றில் நடனமாடும். பின்னணியில் இதமான இசை மனதை வருடும். இதனோடு தமிழகத்தில் எங்குமில்லாத 'மியூசிக்கல் ஸ்கிரீன்' என்னும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.



நிரூற்றில் பீறிட்டு வரும் தண்ணீரில் புரொஜக்டர் மூலம் பின்னணி இசையுடன் படக்காட்சி திரையிடப்படும். தியேட்டரில் பார்க்கும் காட்சியை நீரூற்றில் பார்க்கும் வாய்ப்பு இதில் உண்டு.

வரவேற்பை பெறாத வினோதம் கண்களுக்கு விருந்தளிக்கும் இம்மியூசிக்கல் பவுண்டேன் ஏனோ மதுரை மக்களை வசீகரிக்க தவறிவிட்டது. தினமும் இரவு 7:00 முதல் 9:00 மணி வரை நிகழ்த்தப்படும் இருகாட்சிகளுக்கும் சொற்ப எண்ணிக்கை பார்வையாளர்களே வருகின்றனர்.



துவங்கிய புதிதில் ஓரளவு எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் தினமும் பத்து பேர் வந்தாலே ஆச்சர்யமாக உள்ளது. வர்த்தக ரீதியாக பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு காரணம், இம்மியூசிக்கல் பவுண்டேன் பற்றி நகர மக்களுக்கு பெரிய விழிப்புணர்வு இல்லை. இப்பொழுதுபோக்கு அம்சம் இருப்பது பலருக்கும் தெரியவில்லை.



மதுரையில் மட்டுமே...


பராமரிப்பு நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.30 கட்டணம். மக்கள் இதற்கு வரவேற்பை தராதது ஆச்சர்யம் அளிக்கிறது. சனி, ஞாயிறுகளில் மட்டுமே ஓரளவு பார்வையாளர் வருகின்றனர். இதர நாட்களில் வெறிச்சோடி கிடக்கிறது. ஆனால் ஒருமுறை வந்தவர்கள் நிச்சயம் மீண்டும் வர விரும்புவர். வருகிற நாட்களில் கூட்டம் அதிகரிக்கும் என நம்புகிறோம்' என்றார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்
பொழுது போக்கு


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
22-அக்-201904:27:06 IST Report Abuse
Loganathan Kuttuva எங்கு நடக்கிறது என்று பலருக்கும் தெரியாது.விளம்பரம் செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X